சீனாவிலும் கொடி நாட்டிய மகாராஜா!.. சொல்லியிருக்கிறது யாருன்னு பாருங்க!..
Maharaja: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்து என்ன மாதிரியான கதையிலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்தவர் இவர்.
மற்ற நடிகர்கள் போல தனக்கு அழகான முன்னணி நடிகை ஜோடியாக இருக்க வேண்டும், 4 பாட்டு, 4 ஃபைட், பன்ச் வசனம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல் கதாபாத்திரம் பிடித்தால் அதில் நடிப்பார் விஜய் சேத்பதி. அதனால்தான், வழக்கமான பாணியிலிருந்து விலகி நல்ல, வித்தியாசமான, புதுமையான கதைகளை எழுதிய இயக்குனர்கள் விஜய் சேதுபதி பக்கம் போனார்கள்.
பல புதிய இயக்குனர்கள் விஜய் சேதுபதி மூலம் அறிமுகமானார்கள். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றெல்லாம் சொல்லாமல், எந்த இமேஜும் பார்க்காமல் நடிப்பார் விஜய் சேதுபதி. அதனால்தான், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடிக்கும் தைரியம் அவருக்கு வந்தது. இந்திய சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத வேடம் அது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஒரு சிறுமிக்கு அப்பாவாக நடித்திருப்பார் விஜய் சேதுபதி. அந்த சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரை தேடி கண்டுபிடித்து அவர்களை பழிவாங்கும் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த படம் நல்ல வசூலை பெற்றது. சமீபத்தில் இந்த திரைப்படம் சீனாவில் வெளியானது. சீன ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் இந்த படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்கிற சில வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்நிலையில், இந்திய தூதரகத்தின் சீனா செய்தி தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் தளத்தில் ‘தமிழ் திரைப்படமான மகாராஜா சீனாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் செய்து வருகிறது’ என பதிவிட்டுள்ளார். இது மகாராஜா படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: அம்மாடியோ!.. இத்தனை கோடியா?.. மகன் திருமணத்திற்கு நாகார்ஜுனாவின் காஸ்ட்லி பரிசு!..