Connect with us
banner

வாடகை தாயா? இரட்டை குழந்தைகளுக்கு தாயான சின்மயி நெகிழ்ச்சி பதிவு!

chinmayi dp

Entertainment News

வாடகை தாயா? இரட்டை குழந்தைகளுக்கு தாயான சின்மயி நெகிழ்ச்சி பதிவு!

பிரபல பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது!

பிரபல பாடகியான சின்மயி ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி அறிமுகமானார். முதல் பாடல் சூப்பர் ஹிட் அடித்து இன்றளவும் பலரது பேவரைட் பாடலாக இருக்கிறது.

அதை தொடர்ந்து எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி , சிவாஜி, எந்திரன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஐ என தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் ராகுல் ரவீந்திரன் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

chinmayi 11

chinmayi 11

8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த சின்மயிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அந்த மகிழ்ச்சி பதிவில், ‘“ எங்களுக்கு ட்ரிப்தா மற்றும் ஷ்ரவாஸ், என ஒரு மகன் ஒரு மகள் பிறந்திருக்கிறார்கள். எங்களது புதிய மற்றும் என்றைக்குமான பிரபஞ்சத்தின் மையம் இனி இவர்கள் தான்.

chinmayi

chinmayi

எனது கர்ப்ப காலம் முழுவதும் நிறைய பேர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் எனக்கு குழந்தை இல்லாதது குறித்தும், நான் பெண்ணாக முழுமையடையவில்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். இன்று குழந்தைகள் பிறந்த பின்னரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றீர்களா என கேட்கிறார்கள்.

chinmayi 11

chinmayi 11

இதையும் படியுங்கள்:ஒரு பிட்டு தான் ஓட்டினு இருக்கு… கிட்டக்க காட்டி கிறங்க வைத்த கியாரா அத்வானி!

காரணம் நான் மற்றவர்களை போல கர்ப்பமான செய்தியையோ, பிரசவகால புகைப்படங்களை வெளியிடாததால் தான். என்னுடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படக்களை சமூக வலைதளத்தில் பதிவிட மாட்டேன்.

chinmayi

chinmayi

என்னை பாதுகாத்துகொள்ள எனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும். நான் இப்போதும் எப்போதும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதுகாத்து தான் வைப்பேன் என அந்த பதிவில் கூறியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top