1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனம், தமிழ் சினிமாவின் வரலாற்றையே மாற்றியமைத்த நிறுவனம் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் பலருக்கும் வாழ்வளித்த நிறுவனம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு டாப் நடிகர்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய நிறுவனமாக திகழ்ந்து வந்தது ஏவிஎம்.
என்னதான் ஒரு நிறுவனம் அமோக வளர்ச்சியடைந்தாலும் ஒரு கட்டத்தில் சில சரிவுகள் வருவது இயற்கையே. அதன்படி ஏவிஎம் நிறுவனத்திற்கும் அப்படிப்பட்ட ஒரு காலகட்டம் வந்தது. இந்த நிலையில் ஏவிஎம் நிறுவனம் இந்த சரிவில் இருந்து எப்படி மீண்டு வந்து என்பது குறித்த சுவாரசிய தகவலை இப்போது பார்க்கலாம்.
ஏவிஎம் நிறுவனம் பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வந்த நிலையிலும் ஒரு கட்டத்தில் பொருளாதார பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆதலால் ஏவிஎம் ஸ்டூடியோவை குத்தகைக்கு விற்றுவிடலாம் என்று முடிவெடுத்தாராம் ஏவிஎம் ஸ்டூடியோவின் நிறுவனரான மெய்யப்பச் செட்டியார்.
அதன்படி ஒருவரிடம் குத்தகைக்கும் பேசி முடித்துவிட்டாராம் மெய்யப்பச் செட்டியார். அப்போது மெய்யப்பச் செட்டியாரிடம் சென்ற அவரது மகனான ஏவிஎம் சரவணன் “எனக்கு ஒரு ஆறுமாத காலம் அவகாசம் கொடுங்கள். நமது ஸ்டூடியோவிற்கு மிகப்பெரிய வருமானம் வரும்படி நான் செய்கிறேன். அப்படி நான் செய்யவில்லை என்றால் நீங்கள் தாராளமாக ஸ்டூடியோவை குத்தகைக்கு விடுங்கள்” என கோரிக்கை வைத்தாராம்.
சரவணின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் மெய்யப்பச் செட்டியார். இதனை தொடர்ந்து ஏவிஎம் சரவணன், தனது நெருங்கிய நண்பராக திகழ்ந்த பிரபல தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரிடம் சென்றாராம்.
“ஏவிஎம் ஸ்டூடியோவின் பொறுப்பு இப்போது என் கையில் இருக்கிறது. ஆதலால் நீங்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும். உங்கள் தயாரிப்பில் எடுக்கப்படும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை எங்கள் ஸ்டூடியோவில் நடத்தவேண்டும்” என கேட்டுக்கொண்டாராம்.
இதையும் படிங்க: பாரதிராஜா படத்துக்கு ஆடிஷன் போன சிரஞ்சீவி… ஆனால் செலக்ட் ஆனதோ தமிழின் முன்னணி நடிகர்… யார்ன்னு தெரியுமா??
உடனே தேவர் “இனிமேல் என்னுடைய தயாரிப்பில் எடுக்கப்படும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் ஏவிஎம் ஸ்டூடியோவில்தான் நடக்கும். தைரியமாக போய் வாருங்கள்” என கூறினாராம். சின்னப்பா தேவர் ஏவிஎம் ஸ்டூடியோவில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த தொடங்கிய பிறகுதான் பல தயாரிப்பு நிறுவனங்களின் படப்பிடிப்புகள் ஏவிஎம்மில் நடக்கத் தொடங்கியதாம்.
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…