நான் சாய்பல்லவியுடன் டூயட் பாட வேண்டும்... 66 வயது நடிகர் ஓபன் டாக்...
தமிழ் நடிகையான சாய் பல்லவி தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடிந்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திறமை வாய்ந்த நடிகையான இவரை தமிழ் சினிமா தவறவிட்டு விட்டது என்று தான் கூற வேண்டும். ஒருவேளை இவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகாமல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தால் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே.
மலையாளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரமேம் படம் தான் சாய் பல்லவியின் முதல் படம். அப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் தமிழ் பேசும் பெண்ணாக சாய் பல்லவி நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு இவரை தவிர வேறு யாரும் அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருக்க முடியாது.
பிரேமம் படம் வெளியான சில வருடங்கள் வரை ரசிகர்கள் மனதில் மலர் டீச்சரின் தாக்கம் இருந்தது. பட்டிதொட்டி எங்கும் பயங்கர பிரபலமான சாய் பல்லவி தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். தமிழ் பெண்ணாக இருந்து இதர மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவது தமிழ் நடிகர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
தற்போது நடிகை சாய் பல்லவி தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பேசிய சிரஞ்சீவி, "போலோ ஷங்கர் படத்தில் நல்லவேளையாக சாய்பல்லவி நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகவில்லை. நான் அவருடன் டூயட் பாடவே ஆசைப்படுகிறேன் சாய்பல்லவிக்கு அண்ணனாக நடிப்பதற்கு எனக்கு சிறிதும் விருப்பமில்லை" என நகைச்சுவையாக கூறினார். முன்னதாக போலோ சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க சாய்பல்லவியை தான் முதலில் படக்குழுவினர் அணுகினார்கள். அதன் பின்னரே கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.