Chithi: ‘சித்தி’ சீரியல் நடிகர் உடல் நலக் குறைவால் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்

by Rohini |   ( Updated:2025-04-04 02:48:22  )
chithi
X

chithi

பிரபல குணச்சித்திர நடிகர் ரவிக்குமார் காலமான செய்தி இன்று பல பேரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.தமிழ் திரையுலகில் நடிப்பிற்கு பேர் போனவர் நடிகை ராதிகா. பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நீங்க இடம் பிடித்தவர். ராடன் பிக்சர்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரித்த தொடர்களில் மிகவும் புகழ் பெற்ற தொடர் சித்தி.

1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சித்தி சீரியல் 2001 ஆம் வருடம் வரை ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.அதிலிருந்து ராதிகாவை ரசிகர்கள் சித்தி என்று தான் அழைக்க ஆரம்பித்தனர். எந்த ஒரு தொடரும் இந்த அளவு பெரிய ரீச் ஆனதில்லை. ஆனால் சித்தி தொடர் இன்று வரை மக்களுக்கு பிடித்த ஒரு தொடராக பார்க்கப்படுகிறது. இதன் முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் ஆரம்பிக்கப்பட்டு வெளியானது. ஆனால் முதல் பாகம் பெற்ற வெற்றியை இரண்டாம் பாகம் பெற முடியவில்லை.

சித்தி தொடர் போலவே ராடன் நிறுவனம் மீண்டும் அண்ணாமலை என்ற பெயரில் மற்றொரு தொடரையும் ஆரம்பித்தது. அதுவும் நல்ல ஒரு வெற்றியை பெற்றது. ராதிகா தயாரிக்கும் தொடர்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ இந்த நடிகர் கண்டிப்பாக இருப்பார். அவர் வேறு யாரும் இல்லை. பிரபல குணச்சித்திர நடிகர் ரவிக்குமார். சித்தி மற்றும் அண்ணாமலை ஆகிய இரு தொடர்களிலும் ராதிகாவுக்கு அப்பாவாக நடித்தவர்.

கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்ல. மலையாள திரைப்படங்களிலும் பெருமளவில் அவர் நடித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவரை எந்த ஒரு படங்களிலும் தொடர்களிலும் பார்க்க முடியவில்லை. ஆனால் இன்று அவருடைய மறைவு செய்தியை கேட்டு அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவருக்கு கேன்சர் நோய் இருந்ததனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று அவர் காலமாகி இருக்கிறார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story