
Cinema News
11 பெண்களுடன் உல்லாசம்..சித்ரா கொலைக்கு பின்னால் 4 பேர்…திடுக்கிடும் தகவலை வெளியிட்ட நடிகை…
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையில் சித்ரா கொலைக்கான பல மர்மமான செய்திகள் இணையத்தில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் சித்ராவின் தோழியும் சீரியல் நடிகையுமான ரேகா நாயர் பல தகவல்களை மீடியா முன் வந்து கூறியிருக்கிறார்.
அவர் கூறுகையில் “ ஹேம்நாத் ஒரு நல்ல ஆம்பளையே இல்ல, ஊதாரித்தனமாக குடித்து கும்மாளமாய் இருக்கிறான். பொண்டாட்டி செத்தவன் மாதிரியா இருக்கான்? இதுல எல்லாரும் மிரட்டுராங்கனா எப்படி? கடன் கொடுத்தவங்க, கார் ட்யூ கேக்குறவங்க, எல்லாரும் கேட்கத்தான் செய்வாங்க, இத மிரட்டுறதுனு சொல்றதா?” என பேட்டியில் விளாசியிருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில் “ அவள் கொலைக்கு பின்னால் 4 பேர் இருக்காங்க, அவங்கதான் சித்ராவை கொலை செய்துவிட்டு காருக்குள் தூக்கி போட்டு ரட்சகன் படத்தில் தூக்கிட்டு போவது போல கொண்டு போய் தூக்கில் போட்டு விட்டார்கள் “ என கூறியுள்ளார். ஹேம்நாத் அப்பவே ஒரு பிரபலமான அரசியல் கட்சிகளுக்கு பெண்களை சப்ளை செய்வான்.அந்த வலையில் தான் சித்ரா மாட்டிக் கொண்டாள், இப்பவும் அவன் வெளியே வந்த பிறகு அதே வேலையைத் தான் பாக்கிறான், மற்றும் 11 பெண்களுடன் உல்லாசமாக இருக்கிறான்” என கூறியுள்ளார்.
அவன் பல பெண்களின் வாழ்க்கையோடு விளையாண்டு கொண்டு இருக்கிறான். அந்த பெண்களோடு உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது.ஆகையால் சித்ராவின் மரணம் தற்கொலை இல்லை, கொலைதான்.அதுவும் ஹேம்நாத் மட்டும் செய்யவில்லை, அவன் பின்னாடி 4 பேர் இருக்கிறார்கள் என அடித்துக் கூறினார்.