மொத்தம் 4 பேரு...காருக்குள் போன சித்ராவின் உயிர்...தோழி பகீர் தகவல்...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து பல்வேறு வகையான பல திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆரம்பத்தில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று பிரேத பரிசோதனையில் உறுதியானது என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் சித்ராவின் வீட்டார் இது கொலை என போலீஸில் புகார் ஒன்றை கொடுத்தனர்.
இதில் சித்ராவின் காதலர் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து விசாரித்தனர். ஆனால் இரண்டு மாதங்களுக்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார் ஹேம்நாத். இந்த பிரச்சினைகளுக்கு இடையில் ஹேம்நாத் நண்பர், திரைபிரபலங்கள் என சித்ராவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வந்தனர்.
இந்த நிலையில் சித்ராவின் தோழியும் நடிகையுமான ரேகா நாயர் சித்ராவின் மரணம் கொலைதான், தற்கொலை இல்லை என சமீபகாலமாக கூறிவந்த நிலையில் தற்போது ஒரு புது பூகம்பத்தை கிளப்பியுள்ளார். அதாவது சித்ராவின் மரணத்தில் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறுகிறார். அவர்கள் தான் சித்ராவை காருக்குள் கூட்டிகிட்டு போய் கொன்று விட்டனர். அதன்பிறகு சித்ராவை தூக்கிக் கொண்டு ரூமில் தூக்குப் போட்டு விட்டனர்.
இதையெல்லாம் அறிந்த ஹேம்நாத் போலீஸிடம் சொல்லவேண்டியது தானே? பொண்டாட்டி செத்த சோகத்தில் இருக்கிறவன் மாதிரியா இருக்கான் என ஹேம்நாத்தை வசமாக சாடியுள்ளார். அவளை கொலைசெய்தது அந்த நான்கு பேரும் கூடவே ஹேம்நாத்தும் தான் என அடித்து கூறி பெரும்பூகம்பத்தை கிளப்பியுள்ளார் ரேகா நாயர். போலீஸ் தரப்பில் என்ன செய்ய போகிறது என காத்திருந்து தான் பார்க்கனும்.