விஜய் டிவி ரக்‌ஷன் சித்ராவிற்கு தொடர் தொல்லைகள் கொடுத்தாரா? சித்ராவின் மரண வழக்கில் புதிய திருப்பம்...

தமிழ் சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கணவர் கொடுத்துள்ள பேட்டி வைரலாக பரவி வருகிறது. அதில் சித்ரா கொலையில் மற்ற சிலருடன் தொகுப்பாளர் ரக்‌ஷன் சம்மந்தப்பட்டிருக்கிறார் எனக் கூறிய தகவல்கள் பலருக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் வந்தவருக்கு இத்தொடரின் மூலம் அதிக ரசிகர்கள் சேர்ந்தனர். 2020ல் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா

சித்ரா

இவர் மரணத்தில் சந்தேகம் அனைவரிடத்திலும் வலுத்தது. சித்ராவிற்கு நிச்சயம் செய்திருந்த ஹேமந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்தவர் தொடர் சில சர்ச்சையான தகவல்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய பேட்டி வைரலாக பரவி வருகிறது. அதில் பேசி இருக்கும் ஹேமந்த், விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கும், அண்ணாநகர் விமலம் மெஸ் ஓனர் குறிஞ்சி செல்வனுக்கும் சம்மந்தம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இருவரும் சித்ராவிற்கு பல வழிகளில் தொல்லை கொடுத்ததாக தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான ஆதாரங்கள் எல்லாம் சித்ராவின் ஆண் நண்பர் ரோஹித்திடம் இருப்பதாக தெரிவித்தார். இதை ரோஹித் தான் தன்னிடம் கூறினார் எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: காதல் நாடகம்…..மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருந்த சித்ரா…! புது புரளியை கிளப்பிய மர்ம நபர்…

தொடர்ந்து, தான் சிறையில் இருந்து வெளிவந்த போது இதை ரோஹித் என்னிடம் கூறினார். ஆனால், அவர் சித்ராவிற்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தனரா? இல்லை பண நெருக்கடியை கொடுத்தனரா என்பதை கூற இயலாது எனக் கூறிவிட்டார்.

சித்ரா - ஹேமந்த்

சித்ரா - ஹேமந்த்

தொடர்ந்து, ஹேமந்தின் ஜாமீன் மனுவினை ரத்து செய்ய ரோஹித் மனு போட்டு இருந்தார். அதில், ஹேமந்த் டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதால் சில விவிஐபிக்கள் பெயர் கெட்டுவிடும். அப்படி குறிப்பிடப்பட்ட அந்த விவிஐபிக்கள் யார் என கூறவேண்டும். அவர்களை கண்டுப்பிடித்து வெளியில் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் ஹேமந்தின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவரை மீண்டும் சிறைக்கு அனுப்பி விடுவர். இதனால் அவர் உயிருக்கே ஆபத்து இருப்பதாகவும் ஹேமந்தின் வக்கீல் தெரிவித்து இருக்கிறார்.

 

Related Articles

Next Story