மாஸ்ஹிட் படத்தின் மூன்றாம் பாகத்திற்கே ஐடியா கொடுத்த பாடகி சித்ரா… கமல் ஐயா ரெடியா?
Chitra:பொதுவாகவே சினிமாவில் இரண்டாம் பாகங்கள் இதுவரை சரியான வரவேற்பை தமிழில் பெறவில்லை. ஆனால் மற்ற மொழிகளிலிருந்து வெளியாகும் பான் இந்தியா திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் பெரிய அளவில் வைரல் ஹிட் அடித்து இருக்கிறது.
அந்த லிஸ்டில் முக்கிய இடத்தில் இருப்பது மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம். ஜித்து ஜோசப் இயக்கிய திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். முதல் பாகம் வெளியாகி அமோக வரவேற்பை பெற இரண்டாம் பாகம் வெளியாகவே 5 வருடங்கள் எடுத்துக் கொண்டது.
இதையும் படிங்க: அந்த படம் பிரசாந்துக்கு சொன்னது… மொக்க காரணத்தால் மிஸ்ஸான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்..
இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து இயக்குனர் ஜித்து ஜோசப் பேசியிருக்கும் சில விஷயங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அது பற்றிய அவர் கூறும்போது, த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தை முடித்த பின்னர் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணமே இல்லை.
ஆனால் திடீரென ஒரு எண்ணம் தோன்ற அதை வைத்து இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்தோம். அதனால் தான் அதற்கு பல வருடங்கள் இடைவெளி விடப்பட்டது. தொடர்ந்து மூன்றாம் பாகத்தின் கிளைமாக்ஸ் குறித்த ஐடியா மட்டும் என்னிடம் இருக்கிறது. அது குறித்து மோகன்லால் இடம் சொன்னபோது அவருக்கும் அது பிடித்து விட்டது. இதனால் மற்ற இடங்களை இனி நிரப்ப வேண்டும்.
இதையும் படிங்க: முத்து-மீனா பிரச்னை முடிஞ்சிது… அரசுவேலைக்கு தயாராகும் செந்தில்.. எழில் பிறந்தநாளுக்கு வருவாரா?
அதற்கு இன்னும் நேரம் எடுக்கலாம். தொடர்ந்து இது பற்றி பாடகி சித்ராவிடம் ஒரு விழாவில் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னதை வைத்து திருஷ்யம் மூன்றாம் பாகத்தின் ஆரம்ப புள்ளியை கண்டறிந்துவிட்டேன். விரைவில் இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகளை தொடங்கலாம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். த்ரிஷ்யம் படம் பலமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தை மீண்டும் கமல் கையில் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.