Cinema News
“லவ் டூடே இயக்குனர் செய்த தவறை ஒரு காலத்தில் வைரமுத்துவும் செய்தார்”… குண்டை தூக்கிப்போட்ட பிரபல தயாரிப்பாளர்…
பிரதீப் ரங்கநாதன், இவானா, ரவீனா ரவி, சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் “லவ் டுடே”. இத்திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
‘லவ் டுடே” திரைப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
வெற்றி இயக்குனர்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கோமாளி”. இத்திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன்தான் இயக்கியிருந்தார். “கோமாளி” திரைப்படம் ஜெயம் ரவியின் கேரியரில் மிகவும் முக்கியமான வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது. மிகவும் வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
“கோமாளி” திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இரண்டாவது திரைப்படம்தான் “லவ் டூடே”. பிரதீப் ரங்கநாதன் இத்திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தபோது, புதுமுகத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் படம் வெளியான பிறகு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக இத்திரைப்படத்திற்குச் சென்றனர். பிரதீப் ரங்கநாதன் தற்போதைய இளைஞர்களின் ரசனையை அறிந்தவராக திகழ்கிறார். ஆதலால் “லவ் டூடே” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்துள்ளது.
5 கோடி-50 கோடி
“லவ் டூடே” திரைப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆனால் தற்போது வரை 50 கோடி வரை வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்துள்ளது.
இணையவாசிகளின் ட்ரோல்கள்
“லவ் டூடே” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இணையத்தில் திடீரென பிரதீப் ரங்கநாதனின் பழைய ஃபேஸ்புக் பதிவுகள் மீண்டும் வைரல் ஆனது. பிரதீப் ரங்கநாதன் சினிவிற்குள் வருவதற்கு முன்பு பல திரைப்படங்களையும், நடிகர்களையும் விமர்சித்து எழுதியிருக்கிறார். இணையவாசிகள் திடீரென அந்த பதிவுகளை எல்லாம் வைரல் ஆக்கினர். இதனால் இணையத்தில் பெரும் சர்ச்சையே எழுந்தது.
இதையும் படிங்க: ஹிட் படத்தை வடநாட்டுக்கு கொண்டு போன ஸ்ரீதர்… “நமக்கு இது செட் ஆகாது”… ஹிந்தி நடிகையை தூக்கி எறிந்த சம்பவம்…
வைரமுத்துவும் அப்படித்தான்
இந்த நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்கப்பட்டபோது, அவர் வைரமுத்து குறித்து ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருந்தார். அதாவது “இன்று சினிமாவில் பிரபலமாக உள்ள அனைவருக்கும், அவர்கள் சினிமாவில் அடி எடுத்துவைப்பதற்கு முன்பு சினிமாவின் மேல் நல்ல அபிப்ராயம் இருந்ததாக சொல்ல முடியாது. வைரமுத்து கூட ‘இந்த சினிமாவை தீக்குச்சிக்கு இறையாக்குவோம்’ என்று கவிதை எழுதியிருக்கிறார். இது போன்ற கவிதை எழுதியதற்காக வைரமுத்துவை குறை சொல்லமுடியுமா? வைரமுத்து அதன் பின் சினிமாவில் புகழ்பெறவில்லையா?
அதே போல் ஒரு காலத்தில் பிரதீப் ரங்கநாதனும் சினிமா உலகை விமர்சித்திருக்க கூடும். அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சினிமா மீதான அவரது பார்வை அப்படி இருந்தது என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள முடியுமே தவிர, இப்போது அந்த பழைய பதிவுகளை எல்லாம் தூக்கி வந்து வாதம் செய்வது என்பது சரியல்ல” என கருத்து தெரிவித்துள்ளார்.