தனக்கு தானே வேட்டு வைத்துக்கொள்ளும் அதர்வா.. இனியும் அதை சரிபண்ணலைன்னா அவ்வளவுதான்!!
“பாணா காத்தாடி” என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் அதர்வா. பிரபல நடிகரான முரளியின் மகன் என்ற அடையாளத்தையும் தாண்டி ஒரு சிறந்த நடிகராக அதர்வா தனது முதல் படத்திலேயே ஜொலித்தார். மேலும் தனது வசீகரமான அழகால் இளம்பெண்களை கவரவும் செய்தார்.
“பாணா காத்தாடி” திரைப்படத்திற்கு பின் “முப்பொழுதும் உன் கற்பனைகள்” என்ற திரைப்படத்தில் நடித்தார் அதர்வா. ஆனால் அத்திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதன் பின் தான் அவர் கேரியரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய “பரதேசி” திரைப்படம் வெளிவந்தது. அதர்வா தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது இத்திரைப்படத்தில்தான்.
அதன் பின் “அதர்வா” நடித்த சண்டிவீரன் திரைப்படம் ஹிட் ஆனாலும், அதனை தொடர்ந்து அவர் நடித்த பல திரைப்படங்கள் மண்ணைக் கவ்வியது. “கணிதன்”, “ஈட்டி”, “இமைக்கா நொடிகள்” போன்ற திரைப்படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தாலும் அவரது கேரியரில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.
இதற்கெல்லாவற்றுக்கும் மேலாக சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளிவந்த “குருதி ஆட்டம்” படுதோல்வி அடைந்தது. எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தது. திரைக்கதையை மிகவும் சொதப்பலாக எழுதியிருக்கிறார் என இயக்குனர் ஸ்ரீகணேஷின் மேல் பல விமர்சனங்கள் வந்தது.
அது மட்டுமல்லாது சென்ற வாரம் வெளியான “டிரிக்கர்” திரைப்படமும் அதர்வாக்கு கைக்கொடுக்கவில்லை. இந்த நிலையில் அதர்வா குறித்து ஒரு புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அவரை சந்திக்கவரும் இயக்குனர்களிடம் அவர் கதை கேட்பதற்கு நேரமே ஒதுக்குவது இல்லையாம். அவரை சந்திக்க பல இளம் இயக்குனர்கள் கதைசொல்ல அடிக்கடி வந்தாலும் அவர்களை பார்ப்பதற்கும் நேரமே ஒதுக்குவதில்லையாம்.
இது குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், “அதர்வாவுக்கு நல்ல கதைகளே வரவில்லை என்று கூறமுடியாது. அதர்வாவை சந்திக்க பல இளம் இயக்குனர்கள் இங்கே தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை சந்திப்பதற்கு நேரமே ஒதுக்கவில்லை அதர்வா” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “முதலில் பொறுமையாக பல கதைகளை கேட்கவேண்டும். அதில் இருந்து சிறப்பான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும். அப்படி நடித்தால் தொடர்ந்து வெற்றிகள் கிடைக்கும்” எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.