ஒரு பொறுப்புள்ள இயக்குனர் இப்படி பண்ணலாமா?... மிஷ்கினை விளாசி தள்ளிய பிரபல தயாரிப்பாளர்…

Mysskin
இயக்குனர் மிஷ்கின் சமீப காலமாக பல விழா மேடைகளில் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களை விமர்சிக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களை ஒருமையில் பேசி வந்தது சர்ச்சைகளை கிளப்பியது.

Mysskin
சில வருடங்களுக்கு முன்பு “துப்பறிவாளன் 2” திரைப்படத்தில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கு இடையே சில விவகாரங்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து ஒரு விழாவில் விஷாலை குறிப்பிட்டு பேசிய மிஷ்கின் “விஷால் ஒரு பொறுக்கி. அவனுக்கு சினிமாவை பற்றி என்ன தெரியும்?” போன்ற பல தகாத வார்த்தைகளால் திட்டினார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
அதனை தொடர்ந்து சமீபத்தில் “கலகத் தலைவன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் “ராஜேஷ் போன்ற குட்டி சுவராகப் போன இயக்குனர்” என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். இது பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியது. இணையத்தில் பலரும் மிஷ்கினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

Mysskin
மேலும் தனது பேட்டிகளில் பல இயக்குனர்களையும் நடிகர்களையும் வாடா போடா என்று ஒருமையில் பேசுவது அவரது வழக்கமாகவும் இருக்கிறது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர் “டைரக்டர் மிஷ்கின் ஏன் மேடைகளில் எல்லாரையும் ஒருமையில் வாடா போடா என பேசுகிறார்? அவருக்கு நடிகர் சங்கத்தில் இருந்து எச்சரிக்கை கொடுக்க வாய்ப்பு இருக்கா?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

Chitra Lakshmanan
அந்த கேள்விக்கு சித்ரா லட்சுமணன் “இந்த விசயத்தில் நடிகர் சங்கம் தலையிட்டு எந்த அறிவுரையும் மிஷ்கினுக்கு கூறமுடியாது. ஆனால் மிஷ்கினால் இது போன்று பேசுவதை தவிர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் “மிஷ்கினை பொறுத்தவரைக்கும் அவர் ஒரு பொறுப்புள்ள இயக்குனர். அப்படிப்பட்டவர் பொது மேடைகளில் மற்ற நடிகர்களையும் இயக்குனர்களையும் ஒருமையில் பேசுவது அவ்வளவு நாகரீகமாக இல்லை என்பதை அவர் உணர்ந்தால் நன்றாக இருக்கும்” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளத்தாக்கில் பதுங்கிக்கொண்டு படமெடுக்க நினைத்த எம்.ஜி.ஆர்… கடைசில இப்படி ஏமாத்திட்டீங்களேப்பா!!…