Cinema News
மிஷ்கின் பேச்சுக்கு எதிர்வினை இல்லையா?? கம்முன்னு கிடக்கும் கோலிவுட்!! பயப்படுறியா குமாரு??
தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராக திகழ்ந்து வரும் மிஷ்கின், ஒரு புதுமை இயக்குனராகவும் அறியப்படுகிறார். இன்று உள்ள பல உதவி இயக்குனர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவரது திரைப்படங்கள் திகழ்கின்றன.
வெற்றி இயக்குனர்
மிஷ்கின் இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்களில் கமெர்சியல் சினிமாவுக்கான அம்சங்கள் மிகவும் குறைவாக இருக்கும். ஆனாலும் அவரது திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றிப்பெற்றுவிடும். இவ்வாறு தனது புதுமையை மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு புகுத்தும் திறமை வாய்ந்தவர் மிஷ்கின்.
விஜய்க்காக எழுதிய கதை
மிஷ்கின் இயக்கிய முதல் திரைப்படம் “சித்திரம் பேசுதடி”. இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இத்திரைப்படத்தில் நரேன், பாவனா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் இத்திரைப்படத்தின் கதை முதலில் விஜய்க்காகத்தான் எழுதப்பட்டது.
இதை ஒரு முறை விஜய்யிடம் மிஷ்கின் இந்த விஷயத்தை கூறியபோது “ஏன் என்னிடம் கூறவில்லை?” என சட்டையை பிடித்து கேட்டாராம். அதற்கு மிஷ்கின் “உங்களிடம் வந்து கதை சொல்லியிருந்தால் நீங்கள் கதையையே மாற்றியிருப்பீர்கள். நான் தற்கொலையே செய்திருப்பேன். அதனால்தான் உங்களிடம் கூறவில்லை” என பதிலளித்தாராம்.
வசை பேச்சுக்கள்
மிஷ்கின் ஒருவரை பாராட்ட முடிவு செய்தால் எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் செல்வார். அதே போல் ஒருவரை வசை பாட வேண்டும் என்றாலும் அப்படித்தான். இதற்கு முன் சினிமா துறையைச் சேர்ந்த பலரையும் மிஷ்கின் வசைபாடியிருக்கிறார். குறிப்பாக “துப்பறிவாளன் 2” விவகாரம் வந்தபோது ஒரு பொது மேடையில் விஷாலை கண்டபடி திட்டினார் மிஷ்கின்.
குட்டிச் சுவர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு “கலகத் தலைவன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின் “உதயநிதிக்காக ஒரு ஆக்சன் கதையை எழுதியிருந்தேன். ஆனால் அவர் காதல் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று குட்டிச்சுவராக போன ராஜேஷ் படத்தில் நடித்தார்” என கூறினார்.
இந்த பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மிஷ்கினின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர். ஆனால் அவரை சினிமாத்துறையினர் யாரும் எச்சரிக்கவோ கண்டிக்கவோ இல்லை.
செல்லக் குழந்தை
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் இது குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது மிஷ்கினை சினிமாத் துறையினர் ஒரு செல்ல குழந்தையை போல் பார்க்கிறார்கள். மிஷ்கினை பொருத்தவரை ஒருவரை பாராட்டுவது என்றால் அவரை வானளாவ பாராட்டுவார்.
அதே போல் யாரையாவது திட்டுவது என்றாலும் எந்த எல்லைக்குச் சென்று வேண்டுமானாலும் திட்டுவார். ஆனால் யாரை அவர் திட்டுகிறாரோ அந்த நபர் கூட மிஷ்கினின் வசை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. அதன் பிறகும் மிஷ்கினுடன் நட்பாகத்தான் பழகுகிறார்கள். மிஷ்கின் தன் மனதில் அவ்வப்போது என்ன தோன்றுகிறதோ அதனை உடனடியாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடிய நபராகத்தான் அவரை சினிமாத்துறையினர் பார்க்கிறார்கள்” என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.