Connect with us

Cinema History

திடீரென வந்த சிக்கல்!.. சம்பளத்தை விட்டுக்கொடுத்த விஜயகாந்த்!.. இப்படி ஒரு மனுசனா?!…

மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்தவர் விஜயகாந்த். கஷ்டப்பட்டு வாய்ப்பு தேடி தரையில் படுத்து உறங்கி பல கஷ்டங்கள் மற்றும் அவமானங்களை சந்தித்து சினிமாவில் நுழைந்தவர். எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகும் நபர் இவர். அதனால்தான் இப்போதும் ‘அவரை போல ஒருவரை பார்க்கவே முடியாது’ என திரையுலகினர் பலரும் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

vijayakanth

மிகவும் எளிமையானவர். தான் சாப்பிடும் உணவு படக்குழுவில் இருக்கும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்து அதை நடைமுறைப்படுத்தியவர். பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். திரையுலகில் பலரும் இவரால் பலன் பெற்றுள்ளனர். பல புதிய நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளார். திரையுலகில் இவரை பாராட்டி பேசாதவர்களே இருக்க மாட்டார்கள் என சொல்லும் அளவுக்கு பலருக்கும் பல நன்மைகளை செய்தவர்.

கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார். அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் மட்டும் வெளியாகி வருகிறார்.

இந்நிலையில், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் ஊடகத்தில் பேசும்போது ‘விஜயகாந்தை போல ஒருவரை பார்க்கவே முடியாது. தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்துகொள்ளும் நடிகர் அவர். அவரை வைத்து ‘புதிய தீர்ப்பு’ எனும் படத்தை தயாரித்தேன். இந்த படம் முடிந்து ரிலீஸ் ஆன நேரத்தில் என்ன காரணத்தினாலோ வினியோகஸ்தர்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை. எனவே எதிர்பார்த்தது போல் படம் வியாபாரம் ஆகவில்லை.

chitra

அதனால் விஜயகாந்திடம் சென்று ‘உங்களுக்கு இரண்டரை லட்சம் சம்பளம் பேசி இரண்டு லட்சத்தை கொடுத்துவிட்டேன். இன்னும் 50 ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். கொடுத்தே ஆக வேண்டும் என நீங்கள் சொன்னால் அதை கொடுத்துவிடுகிறேன்’ என நான் சொன்னேன். அதற்கு விஜயகாந்த் ‘வேண்டாம். அந்த 50 ஆயிரம் பணத்தை எனக்கு நீங்கள் தரவேண்டாம்’ என சொல்லிவிட்டார்’ என கூறியிருந்தார்.

புதிய தீர்ப்பு திரைப்படம் 1985ம் வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top