வேட்டையனுக்கு முன்பே விடாமுயற்சி வருமா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
வேட்டையன், விடாமுயற்சி ரெண்டுமே லைகா நிறுவனத்தோட தயாரிப்பு. இந்தியன் 2 படத்தோட தோல்விக்குப் பிறகு அந்த நிறுவனம் இந்தப் படங்களைத் தான் நம்பியுள்ளது. அதில் எது முதலாவது வருகிறது என்று பார்ப்போம்.
வேட்டையன் படம் ரிலீஸாகறதுக்கு முன்னாடியே விடாமுயற்சி படம் ரிலீஸாகுமான்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் தான் இது.
விடாமுயற்சியின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடிவடையலை. அதுமட்டுமல்லாமல் வேட்டையன் படம் அக்டோபர் 10ல் ரிலீஸ்னு லைகா நிறுவனமே அறிவிச்சிட்டாங்க. அதனால அதற்கு முன்பாக விடாமுயற்சி படம் வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் விடாமுயற்சி. அஜித்குமார், திரிஷா, அர்ஜூன், ரெஜினா கசான்ட்ரா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். 2022ல் அஜீத்தின் பிறந்தநாளுக்கு இந்தப் படம் அறிவிக்கப்பட்டது.
இதற்கான படப்பிடிப்பில் சற்று காலதாமதம் ஆனதால் படம் ரிலீஸாவதிலும் தாமதமாகி விட்டது. இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் அஜர் பைஜானில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படத்திற்குப் பிறகு திரிஷா அஜீத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதே போல் மங்காத்தாவுக்குப் பிறகு அர்ஜூன் அஜீத்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல இசை அமைப்பாளர் அனிருத்தும் அஜீத்துடன் வேதாளம், விவேகம் படங்களுக்குப் பிறகு 3வது முறையாகக் கைகோர்த்துள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை எப்படியாவது இந்த ஆண்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று வேகம் வேகமாக இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அதே போல ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக நடிக்கும் படம் வேட்டையன். ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் வரும் அக்டோபர் 10ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதே தினத்தில் தான் சூர்யா நடித்த கங்குவா படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.