Chiyaan Vikram: ஹீரோ மட்டுமல்ல டப்பிங் ஆர்டிஸ்ட்டா கலக்கிய சீயான் விக்ரம்... லிஸ்ட்டில் இத்தனை தமிழ் ஹீரோவா?

by Akhilan |
Chiyaan Vikram: ஹீரோ மட்டுமல்ல டப்பிங் ஆர்டிஸ்ட்டா கலக்கிய சீயான் விக்ரம்... லிஸ்ட்டில் இத்தனை தமிழ் ஹீரோவா?
X

Chiyaan Vikram: தமிழ் சினிமாவில் குட்டி வேடங்களில் நடித்து பெரிய போராட்டத்துக்கு பின்னரே ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் சீயான் விக்ரம். ஆனால் இதே விக்ரம் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பல சூப்பர் ஹிட் படங்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார். அதுகுறித்த தொகுப்புகள்.

1993ம் ஆண்டு அமராவதி படத்தில் அஜித் அறிமுகமாகி இருந்தார். அப்படத்திற்கு அஜித்துக்கு வாய்ஸ் கொடுத்தது சீயான் விக்ரம் தானாம். அது மட்டுமல்லாமல் பாசமலர்கள் படத்திலும் அவருக்கு குரல் கொடுத்து இருக்கிறார்.

இதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் காதலன் திரைப்படம் உருவாகி இருந்தது. இப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு இணை ரசிகர்களை ஹிட்டடித்தது. இதில் பிரபுதேவாவிற்கு விக்ரம் தான் குரல் கொடுத்து இருந்தாராம்.

1997ம் ஆண்டு விஐபி படத்தில் பிரபுதேவா மற்றும் அப்பாஸ் நடித்திருந்தார். இதில் அப்பாஸுக்கு குரல் கொடுத்தவர் விக்ரம் தானாம். என்னவளே அடி என்னவளே படத்துக்கு ஜெயராமிற்கு குரல் கொடுத்து இருந்தார் விக்ரம்.

இதுமட்டுமல்லாமல் சூப்பர் ஹிட் திரைப்படமான காதல் தேசம் படத்திற்கு அப்பாஸுக்கு குரல் கொடுத்தார். ஜாதி மல்லி படத்தில் நடிகர் வினீத் நடிக்க கே.பாலசந்தர் இயக்கி இருந்தார். வினீத்துக்கு குரல் கொடுத்தவர் சீயான் விக்ரம் தான்.

அரவிந்த் சுவாமி மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மின்சார கனவு. இதில் பிரபுதேவாவுக்கு குரல் கொடுத்து இருக்கிறார் விக்ரம். என்னமோ நடக்குது படத்தில் வெங்கடேஷுக்கு குரல் கொடுத்து இருந்தவர் சீயான் விக்ரம்.

Next Story