பிரபலங்களை கண்டுக்கொள்ளாமல் மறந்த வீர தீர சூரன் ஹீரோயின்!.. சியான் விக்ரம் என்ன பண்ணாரு தெரியுமா?..

by Saranya M |
பிரபலங்களை கண்டுக்கொள்ளாமல் மறந்த வீர தீர சூரன் ஹீரோயின்!.. சியான் விக்ரம் என்ன பண்ணாரு தெரியுமா?..
X

#image_title

விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. அந்நிகழ்சியில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்துள்ள துஷாரா விஜயன் மேடையில் பேசும் போது அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்தார். ஆனால், அவர் முக்கியமான சிலருக்கு நன்றி சொல்ல மறந்ததை விக்ரம் நினைவூட்டிய வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.

துஷாரா விஜயன் போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து நடிகர் ஆர்யாவுடன் ஜோடியாக நடித்திருந்த சார்பட்டா பரம்பரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகைகள் என்றாலே ஸ்டைலாக மற்றும் க்ளாமராக இருந்தால் மட்டும் தான் சினிமாவில் இடம் என்பது இல்லை, அவரவர்களின் திறமையான நடிப்பு தான் முக்கியம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் துஷாரா நடித்திருந்தார்.

துஷாராவின் நடிப்பிற்காக அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அவர் அன்புள்ள கில்லி, அநீதி, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் தனுஷின் ராயன் படத்திலும் தன் நடிப்பு திறமைக்காக பாராட்டுகளை பெற்றார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரமுடன் வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ளார். ரியா ஷிபு தயாரிப்பில் அருண் குமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று அந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய அவர் இந்த படம் தனது கரியரில் ரொம்ப முக்கியமான படமாக இருக்கும், அருண்குமார், ஷிபு, விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறிய அவர் படக்குழுவில் சிலரை மட்டும் விட்டுவிட்டதை விக்ரம் எடுத்து கொடுக்க கொடுக்க அவர்களுக்கும் நன்றி கூறி தனது உறையை முடித்தார்.

Next Story