Cinema News
சீயான் விக்ரம் இப்படிப்பட்டவரா?? உயிர் நண்பனை இப்படியா அவமானப்படுத்துறது??…
கமல்ஹாசனுக்கு பிறகு பல கெட் அப்களில் நடித்து அசரடிக்கும் வல்லமை கொண்டவர் சீயான் விக்ரம். ஒரு திரைப்படத்திற்காக இவர் எடுக்கும் மெனக்கெடல்களை பார்க்கும்போது நமக்கு வியப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை. அந்த அளவுக்கு உயிரையே கொடுத்து நடிப்பவர்.
தொடர் தோல்விகள்
சீயான் விக்ரமின் தந்தையான வினோத் ராஜ்ஜும் ஒரு சினிமா நடிகர்தான். தமிழில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். சீயான் விக்ரம் தொடக்க காலத்தில் பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து “என் காதல் கண்மணி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால் எந்த திரைப்படமும் அவ்வளவாக கைக்கொடுக்கவில்லை.
சேது
சீயான் விக்ரமின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் “சேது”. இத்திரைப்படத்தை பாலா இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல இடர்பாடுகளுக்கிடையே நடந்து முடிந்தது. அதே போல் சுமூகமாக வெளிவரவும் இல்லை.
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பிரத்யேக காட்சிகள் விநியோகஸ்தர்களுக்காக திரையிடப்பட்டது. இதற்காக விக்ரமின் மனைவியும் பொருளாதார உதவிகளை செய்துள்ளார். ஆனால் எந்த விநியோகஸ்தர்களும் அத்திரைப்படத்தை வாங்க முன் வரவில்லை. அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் உதவியால் “சேது” திரைப்படம் ஒரு வழியாக வெளிவந்தது.
மெதுவான ஆனால் பிரம்மாண்ட வெற்றி
தொடக்கத்தில் மிக குறைவான திரையரங்குகளிலேயே “சேது” திரைப்படம் திரையிடப்பட்டது. அதன் பின் படத்திற்கு வந்த வரவேற்பை பார்த்து பல ஊர்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன. இவ்வாறு கொஞ்சம் தாமதமான வெற்றியாக இருந்தாலும், இயக்குனர் பாலாவுக்கும் சீயான் விக்ரமிற்கு மிக முக்கிய திரைப்படமாக “சேது” அமைந்தது.
சீயான் விக்ரமின் ஆட்டம்
இத்திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரமின் ஆட்டம் தமிழ் சினிமாவில் கலைகட்டியது. “தில்”, “தூள்”, “ஜெமினி”, “சாமி”, “அந்நியன்” என தொடர்ந்து பல பிரம்மாண்ட வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் கூட “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக வெறித்தனமாக நடித்திருந்தார்.
சீயான் இப்படிப்பட்டவரா?
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், சமீபத்தில் சீயான் விக்ரம் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது சீயான் விக்ரம் தொடக்கத்தில் ஒரு உதவி நடன இயக்குனருடன் மிகவும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தாராம். அந்த நடன இயக்குனர் ஒரு நாள் தான் இனிமேல் உதவி நடன இயக்குனராக இருக்கப்போவதில்லை, நடன இயக்குனராக வாய்ப்பு தேடப்போவதாக முடிவெடுத்தாராம்.
சீயான் விக்ரம் பிற்காலத்தில் வளர்ந்த பிறகு ஒரு நாள் தனது நண்பரான நடன இயக்குனர் படப்பிடிப்பிற்கு அவரை சந்திக்க வந்துள்ளார். அவரை பார்த்த சீயான் விக்ரம் நேராக சென்று கட்டிபிடித்து நலன் விசாரித்தாராம். தனது நண்பனை பார்த்த சந்தோஷத்தில் மிகவும் உற்சாகத்தோடு நடந்துகொண்டாராம்.
சில மணி நேரம் கழித்து அந்த நடன இயக்குனர் விக்ரமிடம் அவரது திரைப்படத்தில் நடன இயக்குனராக வாய்ப்பு கேட்டாராம். அவர் அப்படி கேட்டவுடன் சீயான் விக்ரம் தனது நாற்காலியை கொஞ்சம் வெகுதூரம் தள்ளிப்போட்டு உட்கார்ந்துகொண்டாராம்.
வெகு நேரம் ஆகியும் தனது நண்பரை கண்டுகொள்ளவே இல்லையாம். “விக்ரம் நாம் வந்ததையே மறந்துவிட்டாரா என்ன?” என்று நினைத்து அந்த நண்பர் விக்ரமின் அருகில் சென்றிருக்கிறார். அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்த விக்ரம் “அப்படி பார்த்துட்டே இருக்காதீங்க, என்னால சாப்பிட முடியலை, அருவருப்பா இருக்கு” என கூறி அந்த நண்பரை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாராம்.