குருதிப்புனல் கமல் போல மாறிய துருவ் விக்ரம்!.. பைசன் ஓடினால் தான் விக்ரம் சன்னுக்கே வாழ்க்கை!..

#image_title
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் எப்படியாவது முன்னணி ஹீரோவாக மாறிவிட வேண்டும் என அவருடைய அப்பா போல பெரும் முயற்சிகளை போட்டு வருகிறார். ஆனால், கடைசியில் தங்கலான் படம் போல துருவ் விக்ரம் நடித்த படங்கள் எல்லாம் வீண் முயற்சியாகவே மாறி வருகின்றன.
தனக்கு பல தோல்விப் படங்கள் கிடைத்த பின்னர், பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் வெற்றியை கொடுத்தது. அதை அப்படியே மனதில் வைத்துக் கொண்டு தனது மகனுக்கு முதல் படமே வெற்றிப் படமாக மாற வேண்டும் என்பதற்காக தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியாகி வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்து பாலாவை வைத்து பண்ண சொன்னால், அவுட்டேட்டட் ஆன பாலா வர்மா என ஒரு குருமா கிண்டிக் கொடுக்க, அப்பா எனக்கு இந்த படம் வேணாம் என அடம்பிடித்தார் துருவ் விக்ரம்.
மீண்டும் ஒருமுறை அதே படத்தில் வேறு ஹீரோயினின் உதட்டை எந்தளவுக்கு கடித்து நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு பனிதா சந்துவுடன் சிந்து பாடிய துருவ் விக்ரமுக்கு ஆதித்யா வர்மாவும் வரமாக அல்லாமல் சாபமாக மாறியது.

#image_title
அதன் பின்னர், அப்பாவின் தயவில் அவர் நடித்த மகான் திரைப்படமும் தியேட்டருக்கு வராமல் ஓடிடியில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறாமல் போய் விட்டது. துருவ் விக்ரம் கண்டிப்பாக வெற்றிக் கொடுத்தாக வேண்டும் என்கிற முடிவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் ரொம்ப வருஷமாக நடித்து வருகிறார்.
இந்த ஆண்டு அந்த படம் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், தனது புதிய போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் துருவ் விக்ரம். சைடு கோடு கட்டிங் எல்லாம் போட்டு போலீஸ் அதிகாரி போல இருப்பதை பார்த்த ரசிகர்கள் குருதிப்புனல் கமல் மாதிரி இருக்கப்பா என கமெண்ட் அடித்து வருகின்றனர். மாரி செல்வராஜின் படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்று வரும் நிலையில், பைசன் விக்ரம் மகனுக்கு வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.