சூர்யாவுக்கு சூனியம் வைக்க பார்க்குறாரே சியான் விக்ரம்!.. கங்குவாவுக்கு காலனாக மாறும் தங்கலான்?..

by Saranya M |   ( Updated:2024-01-15 08:54:20  )
சூர்யாவுக்கு சூனியம் வைக்க பார்க்குறாரே சியான் விக்ரம்!.. கங்குவாவுக்கு காலனாக மாறும் தங்கலான்?..
X

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா படம் வரும் ஏப்ரல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த படத்திற்கு போட்டியாக சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படமும் ஏப்ரல் மாதம் வெளியாகப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் சண்டையை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே சமூக வலைதளத்தில் சூர்யா மற்றும் விக்ரம் ரசிகர்கள் பரம விரோதிகளாக சண்டைப் போட்டு வருகின்றனர். பிதாமகன் படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த நிலையில், அதன் பிறகு விஜய், அஜித் போலவே இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்பதில்லை.

இதையும் படிங்க: இப்படி மாறிட்டாரே கமல்!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட மணிரத்னம்!.. களமிறங்கும் உலக நாயகன்..

இந்த ஆண்டு பொங்கலுக்கு தங்கலான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், படத்தின் மேக்கிங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏகப்பட்ட பேட்ச் வொர்க் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைந்து கிடப்பதால் தங்கலான் திரைப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

சூரி நடிப்பில் உருவாகி உள்ள கருடன் படம் மார்ச் 29 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்துக்கு தங்கலான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. தங்கலான் படம் ஏப்ரல் வந்ததை பார்த்து சூர்யாவின் கங்குவா படம் ஏப்ரலில் வெளியாகாமல் மே மாதம் அல்லது ஜூன் மாதத்துக்கு தள்ளிப் போய் விடும் என்றும் சியான் ரசிகர்கள் சூர்யா ரசிகர்களை சீண்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோட் ஷூட்டிங்கில் ரசிகர்களை சந்திக்கும் விஜய்!… கெட்டப்பால் கவலைப்படாத வெங்கட் பிரபு!… ஏன் தெரியுமா?

Next Story