சியான் எடுத்த அதிரடி முடிவு.. இதுதான் உண்மையான காரணம்.! வீடியோவில் உளறிய விக்ரம்.!

by Manikandan |
சியான் எடுத்த அதிரடி முடிவு.. இதுதான் உண்மையான காரணம்.! வீடியோவில் உளறிய விக்ரம்.!
X

நடிகர் விக்ரமுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியே தெரிய வேண்டாம்.ஏனென்றால், இந்த மனிதர் அந்த அளவிற்கு என்ன கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடக் கூடியவர். ஒவ்வொரு படத்திலும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார்.

இந்நிலையில் அவர் ரசிகர்கள் விக்ரமும் மற்ற நடிகரைப் போல சமூகவலைதளத்தில் வருவாரா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், தற்போது விக்ரம் பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டரில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார். அதற்கான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்- ரோலக்ஸ் பாத்துட்டு நான் கோபபட்டுட்டேன்… தெரியாத்தனமா உண்மையை உளறிய கார்த்தி.!

vikram_main_cine

” ரஞ்சித் படத்திற்காக ரெடி ஆயிட்டு இருக்கேன். நிஜமாவே நான் தான் மாறுவேஷம் எல்லாம் கிடையாது. ட்வீட்டருக்கு ரொம்ப காலதாமதமாக வந்துள்ளேன். 15 வருடம் ஆகிவிட்டது. டிவிட்டரில் இருந்தால் எல்லாருக்கும் எல்லாவற்றையும் தெளிவுபடுத்திவிடலாம் என்று என்னுடைய குடும்பத்தினர்கள் சொன்னார்கள்.

அதுமட்டுமில்ல, இந்த உலகத்தில் எனக்காக பல அன்புகள் உள்ளது எனக்கு அதை அனுபவிக்கலாம் என ட்வீட்டருக்கு வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விக்ரமுக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சில நெட்டின்கள் விக்ரமுக்கு நெஞ்சு வலி என செய்திகளை பரப்பிவிட்டனர்.

எனவே, இனிமேல் இதுபோல வதந்தி தகவல் பரவக்கூடாது எது வேண்டுமானாலும், தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் மூலம் ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிடலாம் என்பதற்க்காக விக்ரம் டிவிட்டரில் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது.

Next Story