தேடுதல் வேட்டையில் படக்குழு.! பறந்து சென்ற சியான் விக்ரம்.! இன்னும் வேணும் எனக்கு..,

by Manikandan |   ( Updated:2022-05-01 07:33:12  )
தேடுதல் வேட்டையில் படக்குழு.! பறந்து சென்ற சியான் விக்ரம்.! இன்னும் வேணும் எனக்கு..,
X

நீண்ட வருடங்களாக ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்த சியான் விக்ரம் அவர்களுக்கு, கடைசியாக அமேசான் OTT தளத்தில் வெளியான மகான் ஒரு நல்ல வெற்றியை கொடுத்தது. அவரது நடிப்பு அந்த படத்தில் வெகுவாக பாராட்டப்பட்டது. ஆனால், அதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் படம் நேரடியாக தியேட்டரில் வெளியாகாமல் அமேசான் தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தை சந்தித்தனர்.

விக்ரமுக்கு எப்போதும் ஒரு பழக்கமுள்ளது. அதாவது, வருடத்திற்கு ஒரு முறை கோடை விடுமுறையில் தனது குடும்பத்தாருடன் வெளிநாடு சென்று விடுவாராம். ஸ்விட்சர்லாந்து போன்ற குளிர் நாடுகளுக்கு சென்று விடுவாராம்.

அதே போல இந்த வருடமும் வெளிநாடு பறந்து விட்டாராம் விக்ரம். இதனால் கோப்ரா படத்தின் சில காட்சிகள் இன்னும் எடுக்க வேண்டி உள்ளதாம். அதனால் இந்த படத்திற்காக விக்ரமை கோப்ரா குழு தற்போது தேடி வருகிறதாம். அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறதாம்.

இதையும் படியுங்களேன் - நல்ல மனுஷன்யா.! அஜித் தீவிர ரசிகராக இருந்தாலும் விஜய்க்கு தான் ஃபுல் சப்போர்ட்.!

இதனை அறிந்த சில சினிமா விமர்சகர்கள், ஏற்கனவே விக்ரம் விடுமுறையில் தான் இருந்தார். அவரது திரைப்படம் கடைசியாக 2019ஆம் ஆண்டு கடாரம் கொண்டான் படம் தான் ரிலீஸ் ஆனது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்துதான் திரைப்படம் ரிலீசாகி உள்ளது. இத்தனை நாட்கள் விடுமுறை அவருக்கு பத்தாதா என்று சிலாகித்து வருகின்றனர்.

விக்ரம் எப்போது வருவார்? கோப்ரா படத்தின் படப்பிடிப்பு எப்போது முழுதாக நிறைவடையும்? அடுத்ததாக படத்தின் ரிலீஸ் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற தமிழ் சினிமா ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

Next Story