தெறி அப்டேட்.! சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக சியான் விக்ரம்.! இத யாருமே எதிர்பார்க்கல.!

by Manikandan |
தெறி அப்டேட்.! சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக சியான் விக்ரம்.! இத யாருமே எதிர்பார்க்கல.!
X

முன்பு தான் இந்திய சினிமாவில் ஹீரோ மிக்க நல்லவராக வில்லன் மிக கொடூரமானவனாக காட்டப்படும். அதன் பின்னர் ஹீரோக்களுக்கும் வில்லன் குணாதிசியங்கள் கொஞ்சம் இருப்பது போல காட்டப்பட்டது. ஆனால், தற்போது ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் தான் வில்லன் எனும் அளவிற்கு வந்துவிட்டது.

அதன் காரணமாக முன்னணி கதாநாயகர்கள் கூட வில்லனாக நடிக்க தயங்குவதில்லை. வில்லன் வேடம் என்றாலும் ரசிகர்கள் ரசிக்க தொடங்கிவிட்டனர் என கூற ஆரம்பித்து ரசிக்க தொடங்கிவிட்டனர்.

இதையும் படியுங்களேன் - உன் மரியாதைய நீ காப்பதிக்கோ.! மேடையில் எச்சரிக்கை விடுத்த இயக்குனர் பாலா.!

மங்காத்தா படத்தில் அஜித் நடித்ததும் வில்லன் கதாபாத்திரம் தான். விஜய் சேதுபதி பல படங்களில் வில்லனாக நடித்து விட்டார். நடித்து வருகிறார். ஃபகத் ஃ ஃபாசிலும் அதேபோல தான். அடுத்தது சியான் விக்ரமும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

அது வேறு யாருமல்ல, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க த்ரிவிக்ரம் இயக்க உள்ள திரைப்படத்தில் சியான் விக்ரமை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம். சியான் தரப்பும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Next Story