காரில் வந்து ஆட்டோவில் ஏறி ஓடிய விக்ரம்!.. படம் பார்க்க வந்தா இப்படியாடா பண்ணுவீங்க!…

#image_title
Veera dheera sooran movie: சேது படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் விக்ரம். அந்த படத்திற்கு முன்பே அவர் பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் டப்பிங் பேசியிருக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். சேது படத்தில் அவ்வளவு உழைப்பை கொட்டியிருந்தார். இந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
அப்படி அவர் நடித்து வெளியான தில், தூள், சாமி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடிக்கவே முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவானது. பல ஹிட் படங்களையும் கொடுத்தார். தற்போது அவரின் மகன் துருவ் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். ஆனால், சியான் விக்ரம் அவருக்கும் டஃப் கொடுத்து வருகிறார்.

அருண் இயக்கத்தில் வீர தீர சூரன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் நேற்று காலை ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் முதலீடு செய்திருந்த சில நிறுவனங்களுக்கும், தயாரிப்பாளருக்கும் இருந்த சில பிரச்சனைகளால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு படம் வெளியாகவில்லை. அதன்பின் பேசி தீர்க்கப்பட்டு நேற்று மாலை 5 மணிக்கு இப்படம் வெளியானது.
நேற்று இரவு 10 மணி காட்சிக்கு ரசிகர்களுடன் படம் பார்க்க ஆசைப்பட்ட சியான் விக்ரம் சென்னை சத்யம் தியேட்டருக்கு சென்றார். விக்ரம் அங்கு வரவே அவரைப் பார்க்கவும், அவருடன் செல்பி எடுக்கவும் ரசிகர்கள் அங்கு கூடிவிட்டார்கள். படம் முடிந்து விக்ரம் கிளம்பும் போது ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்துவிட்டார்கள். எனவே, தலை தெறிக்க ஓடியும் விக்ரமை ரசிகர்கள் விடவில்லை. ஒருவழியாக அங்கிருந்த ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு சென்றார் விக்ரம். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்ரம் படம் பார்க்க வந்த சிறிது நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் சத்யம் தியேட்டருக்கு வந்தார். அவரைப்பார்க்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். ஒருபக்கம், வீர தீர சூரன் படத்திற்கு ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருக்கிறது. குறிப்பாக விக்ரமின் நடிப்பு, இரண்டாம் பாதியில் இடம் பெற்றுள்ள ஆக்சன் காட்சிகளும் சிறப்பாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
.@chiyaan watches FDFS with fans and audience. Due to unprecedented crowd, he took an auto back home. #VeeraDheeraSooran pic.twitter.com/JluZhpsOvk
— sridevi sreedhar (@sridevisreedhar) March 28, 2025