எம்.எஸ்.வி பாட மறுத்த ஹிட் பாடல்!.. புத்திசாலித்தனமாக யோசித்த சோ!.. எப்படி பாட வைத்தார் தெரியுமா?..

by Rohini |   ( Updated:2023-02-11 02:46:35  )
cho
X

cho

தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்களின் பெருமைகளை இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு தன் ஆளுமைகளை நிலை நாட்டியிருக்கின்றனர் என்று தெரிகிறது.

S.V. வெங்கட்ராமன், வரதராஜூலு, எஸ்.எம். சுப்பையா நாயுடு உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையை சுவாசித்த நாம் எம்.எஸ்.வியையும் சற்று உற்று நோக்க ஆரம்பித்தோம். எஸ்.எம்.சுப்பையாவிடம் உதவியாளராக சேர்ந்த எம்.எஸ்.வி ஒரு சமயம் எம்.எஸ்.வி போட்ட மெட்டை தான் போட்டதாக காட்டினார் சுப்பையா. அந்த அளவுக்கு அவர் போட்ட மெட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

cho1

msv

இப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்து மெல்லிசை மன்னனாக உச்சம் பெற்றார் விஸ்வநாதன். ஒரு காலத்தில் எம்.எஸ்.வி இல்லாத சினிமா என்பதே கிடையாது என்ற அளவிற்கு ஆளுமையை வெளிப்படுத்தி வந்தார். இவர் போடுகிற மெட்டுக்கு இணையாக பாட்டெழுத கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலமெல்லாம் உண்டு.

அந்தக் காலத்தில் போட்டிகள் பொறாமைகள் என்ற ஒன்று இருந்ததாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது ஆரோக்கிய போட்டியாகவே இருந்திருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் சோ அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த பேட்டியில் எம்.எஸ்.வியை பற்றியும் அவர் மீது சோ வைத்திருந்த அன்பு பற்றியும் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

cho2

cho2

1971 ஆம் ஆண்டு சோ இயக்கி நடித்த படம் ‘முகமது பின் துக்ளக்’ திரைப்படம். இந்த படத்தில் சோ உட்பட மனோரமாவும் நடித்திருந்தார். படத்திற்கு இசை எம்.எஸ்.வி. இந்தப் படத்தில் அமைந்த மிகப் பெரிய பிரபலமான பாடல் ‘அல்லா அல்லா நீ இல்லாத ’ என்ற பாடல். முதலில் இந்த படத்தை வெளியிடவே பல தடைகள் வந்தன.

இந்தப் பாடலுக்காகவே படம் மாபெரும் வெற்றி பெற்றது. முதலில் இந்த பாடலுக்கு இசையமைக்க எம்.எஸ்.வி மறுத்தாராம். அவர் வேறொருவரை இசையமைக்கும் படி கூறியிருக்கிறார். ஆனால் சோ எம்.எஸ்.வி தான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இருந்தாலும் எம்.எஸ்.வியை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக,

cho3

cho3

சீட்டு குலுக்கி போட்டு யார் பெயர் வருகிறதோ அவர்களே இசையமைக்க வேண்டும் என சோ சொல்ல அதற்கு எம்.எஸ்.வியும் ஒப்புக் கொண்டிருக்கிறார், ஆனால் சோ இரண்டு சீட்டிலும் எம்.எஸ்.வி பெயரைத்தான் எழுதியிருக்கிறார். இது தெரியாத எம்.எஸ்.வி நம் பெயரே விழுந்து விட்டது என எண்ணி அதன் பிறகே அந்த பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : காத்துவாக்குல துவம்சம் செய்த ‘ரன் பேபி ரன்’ திரைப்படம்!.. இது என்னப்பா நம்புற மாதிரி இல்லையே?..

அதன் பிறகு தான் சோ சொல்லியிருக்கிறார். அதை கேட்டு விட்டு எம்.எஸ்.வி அயோக்கிய பயலே என்று செல்லமாக திட்டினாராம். இதை சோ வே அந்த பேட்டியில் கூறினார்.

Next Story