எனக்கு அந்த கதைதான் வேணும்!.. டான் பட இயக்குனரின் தலையில் குண்டை போட்ட ரஜினி.. பாவத்த!..

by Arun Prasad |   ( Updated:2023-01-24 13:40:45  )
Rajinikanth
X

Rajinikanth

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவ ராஜ்குமார், தமன்னா, சுனில், வசந்த் ரவி, விநாயகன் என பலரும் நடித்து வருகின்றனர்.

“ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth

Rajinikanth

“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், “டான்” படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஓரளவு அத்தகவல் உறுதியான தகவலாகத்தான் இருந்தது. ஆனால் சில காரணங்களால் சிபி சக்ரவர்த்தி ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இதனை தொடர்ந்து “லவ் டூடே” இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கப்போவதாகவும் ஒரு தகவல் வந்தது. ஆனால் அது உறுதியான தகவல் இல்லை என தெரியவந்தது. அதன் பின் சில நாட்களுக்கு முன்பு ‘ஜெய் பீம்” இயக்குனர் தா.செ.ஞானவேலிடம் ரஜினிகாந்த் கதை கேட்டுள்ளதாக கூறப்பட்டது. எனினும் இது குறித்த மேலதிக தகவல் எதுவும் வெளிவரவில்லை.

Rajinikanth and Cibi Chakravarthy

Rajinikanth and Cibi Chakravarthy

இந்த நிலையில் ரஜினிகாந்த்தை வைத்து இயக்குவதற்கான கதையை தயார் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், சிபி சக்ரவர்த்தியிடம் ரஜினி கூறிய ஒரு விஷயம் இயக்குனரை கதிகலங்க வைத்துவிட்டதாம்.

அதாவது ரஜினிகாந்த்துக்காக சிபி சக்ரவர்த்தி ஒரு ஆக்சன் கதையை தயார் செய்துகொண்டிருந்தாராம். அந்த கதைக்கு ரஜினிகாந்த்தும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். மொத்த திரைக்கதையையும் எழுதி முடித்தபிறகு திடீரென ரஜினிகாந்த் சிபி சக்ரவர்த்தியிடம் “அந்த கதை வேண்டாம், ஒரு பேமிலி சப்ஜெக்ட் எழுதுங்க” என கூறிவிட்டாராம்.

இதையும் படிங்க: நாயகன் படப்பிடிப்பில் கமல் போட்ட தயிர்சாதம்… 3 லட்சத்தை அசால்ட்டாக விட்டுத்தந்த விஜயகாந்த்… ஏன் தெரியுமா??

Cibi Chakravarthy

Cibi Chakravarthy

இதை கேட்டவுடன் அப்படியே அதிர்ச்சியாகிவிட்டாராம் சிபி சக்ரவர்த்தி. கிட்டத்தட்ட 3 மாதங்களாக அந்த ஆக்சன் கதையை தயார் செய்திருந்தாராம். எனினும் அதன் பின் “பாகுபலி” கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்தை வரவழைத்து ரஜினிக்காக ஒரு பேமிலி சப்ஜெக்ட்டை ரெடி செய்து வந்தாராம். ஆனால் விஜயேந்திர பிரசாத்துக்கும் சிபி சக்ரவர்த்திக்கும் கருத்து மோதல் ஏற்பட அதன் பிறகுதான் ரஜினி பட புராஜெக்ட் கையை விட்டுப் போயிருக்கிறது.

Next Story