Connect with us
banner

மாயோன் புதையல் யாருக்கு கிடைத்தது.?! பின்னணியில் ஜொலித்த இசைஞானி.. முழு விமர்சனம் இதோ…

Cinema News

மாயோன் புதையல் யாருக்கு கிடைத்தது.?! பின்னணியில் ஜொலித்த இசைஞானி.. முழு விமர்சனம் இதோ…

இன்று தமிழ் சினிமாவில் மொத்தம் 5 படங்கள் ரிலீசாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன், சிபி சத்யராஜ் நடித்துள்ளார் மாயோன், அசோக் செல்வனின் வேழம், சுந்தர்.சி – ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி, போலாமா ஊர்கோலம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

இதில், வழக்கமான கதை அம்சங்களை தாண்டி ரசிகர்களை கவனிக்க வைத்த திரைப்படம் என்றால் அது மாயோன் திரைப்படம் தான். அந்த படத்தின் டிரைலரே ரசிகர்களை சற்று உற்று கவனிக்க வைத்தது. ஒரு கோவில் அந்த கோவிலுக்குள் உள்ள  புதையல், அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் என படத்தின் டிரைலர் காண்பிக்கப்பட்டது. அதன் காரணமாகவே  படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

சிபி சத்யராஜ் நாயகனாக நடிக்க, தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரீஷ் பேரடி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை என்.கிஷோர் என்பவர் இயக்கியுள்ளார். திரைக்கதை அமைத்து இப்படத்தை தயாரித்துள்ளார் அருள்மொழி மாணிக்கம்.

மாயோன் எனும் கிராமம் ஒன்று உள்ளது. அங்கு ஒரு பழமை வாய்ந்த ஒரு கிருஷ்ணர் கோவில் இருக்கிறது. அந்த கோவிலில் ஒரு புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது. அதனை ஆராய்ச்சி செய்வதற்காக சிபி சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி ஆகியோர் அடங்கிய அரசாங்க குழு அந்த கோவிலுக்கு வருகிறது.

அந்த கோவிலில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு யாரும் தங்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. அப்படி அதையும் மீறி தங்கினால் அவர்களின் மனநலம் பாதிக்கப்பட்டு விடும் என்று அங்கே நம்பப்படுகிறது. இதில் சிபி சத்யராஜ் மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர்  அரசாங்கத்திற்கு தெரியாமல் அந்த புதையலை கைப்பற்ற ரகசிய திட்டம் தீட்டுகிறார்கள்.

இறுதியில் அந்த புதையல் கிடைத்ததா? அந்த புதையலை எடுப்பதற்கான முயற்சிகளில் ஏற்பட்ட அமானுஷ்ய சம்பவங்களை ஹீரோ எப்படி எதிர்கொண்டு சமாளித்தார், இறுதியில் என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் படக்குழு காட்சி படுத்தி உள்ளது.

இந்த படத்தின் மிகப்பெரிய பலம் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை தான். ஒவ்வொரு காட்சிக்கும் அவரது பின்னணி இசை பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. அவரே இதில் ஒரு சில பாடல்களையும் எழுதியுள்ளாராம். அது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. முக்கியமாக கிருஷ்ணர் வரும் காட்சிகளில் அவர் அமைத்திருக்கும் பின்னணி இசை தியேட்டரை தெய்வீக  குணம் கொண்டதாக மாற்றுகிறது. அந்த அளவுக்கு அருமையாக இசையமைத்துள்ளார் இளையராஜா.

அடுத்து மிகப்பெரிய பலம் என்பது என்றால் அது கலை இயக்குனர் பால சுப்பிரமணியம் அவர்களின் வேலைப்பாடுகள் தான் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு  பிரம்மாண்டமாக காட்சி படுத்தப்படுத்த உதவியுள்ளது.  இது உண்மையிலேயே இப்படி ஒரு இடம் இருக்கிறதா? அல்லது செட் அமைத்து உள்ளனரா? என்பதை பார்வையாளர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தத்ரூபமாக அமைத்துள்ளனர்.

அடுத்து ஹீரோ சிபி சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, தன்யா ரவிச்சந்திரன், ஹரீஸ் பேரிடி ஆகியோர் மிகைப்படுத்த முடியாத அளவுக்கு, தனது கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதனை கச்சிதமாக செய்து நடித்துள்ளனர்.

படம் ஆரம்பித்ததிலிருந்து விறுவிறுப்பாக செல்கிறது. அதற்கு தயாரிப்பாளர் அருள்மொழி மாணிக்கத்தின் திரைக்கதை மிகவும் உதவியாக இருக்கிறது. அவர் அமைத்த திரைக்கதை சுவாரசியமாகவும் திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.

இதையும் படியுங்களேன் – காட்சிக்கு காட்சி டிவிஸ்ட்… மிரளவைத்த மாயோன்… வெளியாகும் ட்வீட்டர் சூப்பர் விமர்சனம்…

படத்தின் ஒளிப்பதிவும் பார்வையாளர்களை கவனிக்க வைக்கிறது. படத்தில் உள்ள சிஜி வேலைகள் சுமாராக இருந்தாலும், அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் அதனை கொஞ்சம் மறக்கடிக்க வைக்கிறது. படத்தின் மீது விழும் விமர்சனம் என்று பார்த்தால், அது ஒன்றே ஒன்று தான்.

 

படத்தின் கதை நன்றாக இருக்கிறது. திரைக்கதை நன்றாக இருக்கிறது. இயக்குனர் இன்னும் மெனக்கெட்டு நடிகர்களிடம் வேலை வாங்கி இருந்தால், அவர்கள் நடிப்பது போல எந்த காட்சியிலும் தெரிந்திருக்காது. அவை தத்துரூபமாக இருந்திருக்கும். அது பார்வையாளர்களை இன்னும் பிரமிப்புடன் பார்க்க வைத்திருக்கும். அந்த கதையினூடே பயணிக்க வைத்திருக்கும் என்பதே பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. மற்றபடி நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட கதையாக மாயோன் திரைப்படம் இருக்கிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top