×

இறங்கி அடிக்கும் சிம்பு...ஆச்சர்யத்தில் படக்குழு.... நாடு பட மாஸ் அப்டேட்...

 

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமான சிம்பு ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்பிற்கு வரமுடியாது என அடம் பிடித்ததன் விளைவு, இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது.அதன்பின் ஒருவழியாக பேச்சுவார்த்தை உடன்பாட்டுக்கு வந்த படப்பிடிப்பு துவங்கியது. அப்போதுதான் கொரொனா பரவல் தமிழகத்தில் அதிகரிக்க அரசு படப்பிடிப்பிற்கு தடை விதித்தது.

அந்த இடைவெளியில் தனது உடல் எடையை பாதியாக குறைத்த சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் குறுகிய நாளில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதோடு, அதே வேகத்தில் மாநாடு பட படப்பிடிபிலும் கலந்து கொண்டுள்ளார். சிம்பு இதே வேகத்தில் நடித்தால் மாநாடு படம் விரைவில் முடிவடைவதோடு, வருடத்தில் 6 படத்தில் சிம்பு நடித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை என சினிமா திரையுலகம் கூறுகிறது.

இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படம் அரசியல் தொடர்பானது என்பதால் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், உதயா, பிரேம்ஜி, கருணாகரன், டேனியல் பால், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். புதுச்சேரியில் படப்பிடிப்பு முடிந்த பின் சில காட்சிகளை ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்படத்தின் சிம்புவின் ஆல்டைம் ஃபேவரைட் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி இப்பத்தை தயாரித்து வருகிறார்.  

From around the web

Trending Videos

Tamilnadu News