Cinema History
சைக்கோ வேடத்தில் மிரட்டிய தமிழ் சினிமா நடிகர்கள்!.. மறக்க முடியாத ராட்சசன்!..
தமிழ்ப்படங்களில் ஒரே மையக்கருவைக் கதை அம்சமாகக் கொண்ட படங்கள் காலத்திற்கேற்ப உருமாறி வருவது ரசனையைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட படங்களில் பெரும்பாலானவை கிரைம் த்ரில்லராகவும், சைக்கோ வகைக் கதை அம்சங்களைக் கொண்டதாகவுமே வந்துள்ளன. என்னென்ன படங்கள் என்று பார்க்கலாமா…
சிறு வயதில் பிறரால் கடும் துன்பத்திற்கு ஆளாகி அதனால் பல்வேறு மனப்போராட்டங்களை சந்தித்தவர்கள் ஒரு காலகட்டத்தில் சைக்கோவாகி விடுகின்றனர். இவர்களைப் பார்க்கும்போது நம்மை அறியாமல் நமக்கே பயம் வந்து தொற்றிக் கொள்ளும். அடுத்த நொடி அவர்கள் என்ன செய்வார்கள் என்பதே தெரியாது. இப்படிப்பட்டவர்கள் கொலைகாரர்களாகவே மாறி விடுகிறார்கள். தமிழ்ப்பட உலகில் இவர்களைக் கொண்டு பல ரசனையான படங்களை எடுத்து விட்டார்கள்.
1978ல் கமல் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் திலீப்பாக நடித்து அசத்தினார். இந்தப் படத்தில் இவர் ஒரு சைக்கோ என்பதே படத்தின் மையப்பகுதியில் தான் தெரிய வரும். காட்சிக்குக் காட்சி கிரைம் த்ரில்லிங்க் செம மாஸாக இருக்கும். அதைத் தொடர்ந்து 1979ல் பாலுமகேந்திரா இயக்கத்தில் மூடுபனி படம் வெளியானது. இதில் பிரதாப் போத்தன் ஒரு சைக்கோ கேரக்டர். சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டையைக் கிளப்பியிருப்பார்.
2003ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் காதல் கொண்டேன். இந்தப் படத்தில் தனுஷ் சைக்கோவாக வினோத் என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அதே போல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்திலும் இவர் கிளைமாக்ஸ் காட்சியில் சைக்கோ போல மாறி விடுவார்.2004ல் சிம்பு இயக்கத்தில் வெளியான படம் மன்மதன். இதில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் சிம்பு சைக்கோ மதன்ராஜாக நடித்து அசத்தியிருப்பார்.
2006ல் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. உலகநாயகன் கமல் நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் கௌதம் வாசுதேவ் மேனன். இதில் வில்லன்களாக வரும் டேனியல் பாலாஜி, சலீம் பாக் ஆகியோர் அமுதன், இளமாறன் கேரக்டர்களில் சைக்கோ வில்லன்களாக வந்து வெளுத்து வாங்கினார்கள்.
2011ல் வெளியான நடுநிசி நாய்கள் படத்தில் நடித்த வீரா, சமர் என்ற கேரக்டரில் சைக்கோவாக நடித்து அசத்தியிருப்பார். 2018ல் வெளியான ராட்சசன் படத்தில் நடித்த சரவணன், கிறிஸ்டோபர் கேரக்டரில் சைக்கோ வில்லனாக வந்து கலக்கியிருப்பார்.
அதே போல 2020ல் ராஜ்குமார் பிச்சுமணி, அங்குலி மாலா கேரக்டரில் சைக்கோ வில்லனாக வந்து மிரட்டியிருப்பார். 2001ல் ஆளவந்தான் படத்தில் கமல் நந்து கேரக்டரில் சைக்கோ வில்லனாக வந்து மிரட்டி இருந்தார்.
2005ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியானது அந்நியன் படம். இதில் விக்ரம் ராமானுஜம் அய்யங்கார் கெட்டப்பில் சைக்கோவாக வந்து மிரட்டியிருப்பார்.