சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகர், நடிகைகளாக வெள்ளித்திரைக்கு வந்தவர்கள்
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தாலே வெற்றி தான். விதிவிலக்காக ஒருவர் மட்டும் எப்எம் மில் இருந்து வந்துள்ளார். அவர் யாருமல்ல சிவா தான். மிர்ச்சி சிவா என்ற பண்பலை வானொலியில் இருந்து சினிமாவில் முன்னணி ஹீரோவாகி உள்ளார். அதனால் தான் இவரும் இந்தப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதுபோன்ற பிறநடிகர்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன்
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். மிமிக்ரியில் அபார திறமை உள்ளவர். 2012ல் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். நகைச்சுவையாக பேசுவதிலும் கவுண்டர் கொடுத்துப் பேசுவதிலும் செம டேலன்ட் உள்ளவர். தனுஷ் உடன் 3 படத்தில் நண்பராக வலம் வந்தார். 2012ல் மனம் கொத்திப் பறவை படத்தில் இருந்து தான் ரசிகர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானார்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று எதிர்நீச்சல் போட்ட இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சேர்ந்து தனக்கென சினிமா உலகில் தனி இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து வந்த மான்கராத்தே, காக்கிசட்டை, ரஜனிமுருகன் என இவரது சினமா வாழ்க்கை உச்சத்திற்கு சென்றது. டாக்டர், டான் வரை இவரது படத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குழந்தைகள் விரும்பும் நட்சத்திரம் என்ற தனி அந்தஸ்தைப் பெற்றார்.
சொர்ணமால்யா
இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக இருந்தார். இளமை புதுமை என்ற நிகழ்ச்சியை சன்டிவியின் மூலம் அறிமுகமானார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
பரதநாட்டியம் பயின்றவர். பெரிய திரையில் மணிரத்னத்தின் அலைபாயுதே, எங்கள் அண்ணா, பெரியார், மொழி, வெள்ளித்திரை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அர்ச்சனா
ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம். ஜீ டிவியில் அதிர்ஷ்ட லட்சுமி, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். 2020ல் பிக்பாஸிற்குள் நுழைந்தார்.
2015ல் பெரிய திரையில் என் வழி தனி வழி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 2017ல் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் சிறு வேடமொன்றில் நடித்தார். 2018ல் ஏன்டா தலையில எண்ணை வைக்கல, 2021ல் டாக்டர் படங்களில் நடித்துள்ளார்.
யூகிசேது
டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார். பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம், அன்பே சிவம், ரமணா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கமலின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் இவர். இவரது முதல் குறும்படம் 1984ல் சர்வதேச திரைப்படவிழாவில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. வேகமாக பேசி நகைச்சுவையால் கவர்வார். இவர் இயக்கிய முதல் படம் கவிதை பாட நேரமில்லை.
இவர் விஜய் டிவியில் நையாண்டி தர்பார் என்ற நகைச்சுவை ததும்பும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். யூகியுடன் யூகியுங்கள், சேதுவுடன் தர்பார் ஆகிய நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் வெளியான வில்லன் படத்திற்கான கதையை எழுதியுள்ளார். அசல், ஹரிதாஸ், தூங்காவனம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
மிர்ச்சி சிவா
மிர்ச்சி எப் எம்மில் அறிவிப்பாளராக பணிபுரிந்த இவர் தனது அபார காமெடி திறமையால் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். வெங்கட்பிரபுவின் சென்னை 600028 படம் மூலம் அறிமுகமானார். இந்தப்படம் செம ஹிட். தொடர்ந்து இவர் நடித்த சரோஜா படமும் ஹிட்டானது. இவர் 2010ல் நடித்து மெகா ஹிட்டான படம் தமிழ்ப்படம்.
2012ல் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். 2013ல் இவர் நடித்த தில்லுமுல்லு செம என்ஜாய்மெண்ட் படம். இது 1981ல் ரஜினி நடிப்பில் வெளியான தில்லுமுல்லுவின் ரீமேக். சொன்னா புரியாது, அட்ரா மச்சான் விசிலு, வணக்கம் சென்னை, கலகலப்பு 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
பிரியங்கா
சினிமா காரம் காபி, சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். 2021ல் பிக்பாஸ் சீசன் 5ல் நுழைந்து முதல் ரன்னர் அப் ஆனார்.
சன் டிவியில் சூரிய வணக்கத்தில் விருந்தினர் பக்கம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 2019ல் வெளியான தேவராட்டம் படத்தில் மதுர பளபளக்குது பாடலைப் பாடினார். இவ்வளவு திறமைவாய்ந்த இவர் இன்னும் சினிமாவில் ஏன் நடிக்காமல் உள்ளார் என்பது புரியாத புதிராக உள்ளது.
சந்தானம்
விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலக்கியவர் இவர். சிலம்பரசனின் நண்பர். அவர் தான் 2004ல் வெளியான தனது மன்மதன் படத்தில் அறிமுகம் செய்தார். 2005ல் சச்சின், 2007ல் பொல்லாதவன், 2008ல் அறை எண் 305ல் கடவுள் என்று வளர்ந்து இவர் 2009ல் சிவா மனசுல சக்தி படத்தில் பெரிய அளவில் பாப்புலரானார். 2010ல் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மெகா ஹிட்டாக இவரது மார்க்கெட் உயர்ந்தது.
2013ல் இருந்து தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த ஆண்டில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவானர். மாபெரும் வெற்றி பெற்றது இந்தப்படம். 2014ல் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்திலும் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, டகால்டி, சக்க போடு போடு ராஜா, டிக்கிலோனா, சர்வர் சுந்தரம் படங்கள் குறிப்பிடத்தக்கவை.
லொள்ளு சபா மனோகர்
சந்தானத்துடன் லொள்ளு சபாவில் நடித்து புகழ்பெற்ற மனோகர் திரைப்படத்திலும் காமெடியில் கலக்கினார். இவர் நடிப்பில் காதல் எப்எம், மாஞ்சா வேலு, அலெக்ஸ் பாண்டியன், என்றென்றும் புன்னகை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, நண்பேன்டா, இனிமே இப்படித்தான், மனிதன், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, அன்பானவன், அசராதவன், அடங்காதவன் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.