தற்போது எங்கு திரும்பினாலும் பேன் இந்திய திரைப்படங்கள் அதிகமாக உருவாகிக்கொண்டிருக்கின்றன. இது போன்ற திரைப்படங்களுக்கு 100 கோடிகளுக்கும் மேல் பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது. இந்த பட்ஜெட் ஒரு முழு படத்திற்காக செலவு செய்யப்படுவதாக ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால் இங்கு நிதர்சனமே வேறாக இருக்கிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் சுசீந்திரன், ஒரு படத்திற்கு எவ்வாறு பட்ஜெட் பிரிக்கப்படுகிறது என்பது குறித்து தெளிவாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுசீந்திரன், “வெண்ணிலா கபடிக்குழு”, “நான் மகான் அல்ல”, “அழகர்சாமியின் குதிரை”, “பாண்டியநாடு” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுசீந்திரன் பட்ஜெட் தீர்மானிக்கப்படும் விதம் குறித்து கூறியுள்ளார்.
“முதலில் ஹீரோ சம்பளம்தான் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு பாயும் புலி படத்தில் விஷாலுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் என்றால், காஜலுக்கு ஒன்றரை கோடி சம்பளம். அடுத்து இசையமைப்பாளருக்கு 1 கோடி சம்பளம், அடுத்து சூரிக்கு 25 லட்ச ரூபாய் சம்பளம். பட்ஜெட்டில் இந்த சம்பளம் எல்லாம் போய்விடும். கடைசியில் மீதி இருக்கும் ரூபாய்க்குத்தான் படமே எடுப்போம்.
இதையும் படிங்க: பீச்சுக்கு காத்துவாங்க போன கே.பி.சுந்தராம்பாள்… தமிழ் சினிமாவிற்கு கிடைத்ததோ ஒரு டெரிஃபிக் வில்லன்… ஆஹா!!
ஆதலால் ஒரு படத்தின் பட்ஜெட்டை ஆர்டிஸ்டுகளும் டெக்னீஷீயன்களும்தான் தீர்மானிக்கிறார்கள். படத்தின் கதைக்கான பட்ஜெட் என்பது இரண்டாம் பட்சம்தான். என்னதான் நாம் முயன்றாலும் 25 கோடிக்கு மேல் படம் எடுக்கவே முடியாது. விஜய் போன்ற பெரிய நடிகர்கள் படத்திற்கு 50 கோடி செலவு செய்வார்கள். மீது பணம் எல்லாம் ஹீரோ, டெக்னீசியன்களுக்குதான் போகும்” என அப்பேட்டியில் சுசீந்திரன் கூறியுள்ளார்.
கங்குவா படத்தின்…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…