நன்றி மறந்த தனுஷ்.! சிக்கிக்கொண்ட சிம்பு.! அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க.?!

by Manikandan |
நன்றி மறந்த தனுஷ்.! சிக்கிக்கொண்ட சிம்பு.! அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க.?!
X

தனுஷ் தான் வளர்ந்து வந்த இடைப்பட்ட காலத்தில் குறிப்பாக எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி படத்தில் இருந்து தனது படங்கள் மற்றும் மற்ற ஹீரோ படங்கள் என ஒண்டெர் பார் நிறுவனம் மூலம் தயாரித்து வந்தார். அப்போது அவருக்கு நிதி உதவி அளித்து அவருக்கு கடன் கொடுத்து உதவியவர்களில் முக்கியமானவர் சினிமா பைனான்சியர் அன்பு செழியன்.

இவரது மகள் திருமண விழா நேற்று தமிழகமே வியக்கும் வண்ணம் கோலாகலமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் முதல் பலர் வந்து விழாவை சிறப்பித்தனர். அன்பு செழியன் பத்திரிகை வைத்தும் சிலர் வரவில்லை.

இதையும் படியுங்களேன் - வெளிநாடுகளில் வலிமை இழந்துவிட்டாரா அஜித்.! காரணம் இதுதானா.?!

அதில், நடிகர் தனுஷும் வரவில்லையாம். அன்பு செழியனால் பலனடைந்தோரில் தனுஷ் முக்கியமானவர் அவர் என வரவில்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

அதே போல, அங்கு சென்ற நடிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர். காரணம் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு இருத்தனாராம். அதில் சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் வந்திருந்தனர். அவர்கள் ரசிகர்கள் மத்தியில் சிக்கிவிட்டனர். ரசிகர்கள் அவர்களை போட்டோ எடுக்க வேண்டும், செல்பி எடுக்க வேண்டும் என பிழிந்துவிட்டனராம்.

இதற்கு பயந்து தான் தனுஷ் வரவில்லையோ என்னவோ. அது அவருக்கு மட்டுமே தெரியும்.

Next Story