Categories: latest news

என்னை நம்ப மாட்டீங்களான்னு கேட்ட மேக்கப் மேன்… எம்ஆர்.ராதா சொன்ன அல்டிமேட் பதில்…!

எம்.ஆர்.ராதாவின் ஒவ்வொரு செயலையும் பார்க்கும்போது ஆரம்பத்துல அதுல ஒரு வில்லத்தனம் தெரிஞ்சாலும் கொஞ்சம் உள்ளே போய் பார்த்தால் அதுல எவ்ளோ பெரிய விஷயம் புதைஞ்சி இருக்குன்னு தெரியவரும். அப்படி ஒரு சம்பவம் தான் இது…

‘நடிகவேள்’ என்று தமிழ்த்திரை உலகில் போற்றப்படுபவர் எம்.ஆர்.ராதா. இவர் ஒரு நாள் தன்னோட மேக்கப்மேன் கஜபதியை அழைக்கிறார். அவர் போனதும் அவரிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுக்கிறார். ‘இளங்கோவனைத் தெரியுமா?’ன்னு கேட்கிறார். ‘நல்லா தெரியும்ணே’ன்னு அவரும் சொல்றாரு.

உடனே அப்படியா அந்தப் பணத்தைக் கொடுன்னு வாங்கிக்கிடறாரு. அப்புறமா டிரைவரை அழைக்கிறார். அவரிடம் கொடுத்து இளங்கோவனிடம் போய் கொடுக்கச் சொல்கிறார். அப்போது எம்.ஆர்.ராதா கஜபதியைப் பார்க்கிறார். அவருக்கு அந்த சம்பவம் என்னவோ போல ஆகிவிட்டது. முகம் எல்லாம் மாறிப்போய் இருந்தார். ‘என்னய்யா என்னவோ மாதிரி இருக்கே..’ன்னு எம்.ஆர்.ராதா கேட்கிறார்.

அப்போது மேக்கப் மேன் கஜபதி ஆத்திரம் தாங்க முடியாமல் கேட்டு விடுகிறார். ‘என்னண்ணே… நான் கொடுக்க மாட்டேனா… என் மேல நம்பிக்கை இல்லையா?’ன்னு கேட்கிறார்.

அதற்கு எம்ஆர்.ராதா விளக்கம் சொல்கிறார். ‘இளங்கோவன் எவ்வளவு பெரிய வசனகர்த்தா… கொடி கட்டிப் பறந்தவரு… செட்ல ஒரு வசனத்தை மாத்தணும்னா கூட அவரைத் தேடிப் போய் அனுமதி வாங்கித் தான் மாத்துவாங்க. அப்பேர்ப்பட்ட ஆளு அவரு. ஆனா நீ அவர் ஓஹோன்னு இருந்தப்ப பார்த்துருக்கே. அதனால தான் அவரை நல்லா தெரியும்னு சொல்றே….

ஆனா இப்போ அவரு நிலைமையே வேற. ரொம்ப கஷ்டத்துல இருக்காரு. அவரு வீட்டை ஜப்தி செய்யப் போறாங்களாம். நீ போய் பணம் கொடுக்குறப்ப அவரு உன்னைப் பார்த்தா என்ன நினைப்பாரு? நம்ம நிலைமை இப்படி ஆயிருச்சேன்னு ரொம்ப வருத்தப்படுவாருல்ல.

அதனால் தான் அவருக்குத் தெரியாதவங்க மூலமா பணத்தைக் கொடுத்து அனுப்பிச்சேன்’னு சொன்னாராம். அவரு அவமரியாதையா நினைக்கக்கூடாது இல்லையா… அப்படின்னு விளக்கம் சொல்ல கஜபதிக்கு நெகிழ்ச்சியாகி விட்டதாம்.

ராம் சுதன்

Recent Posts

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

21 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

2 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

9 hours ago