More
Categories: Flashback

ஜெயலலிதாவுக்கு வந்த ரசிகரின் மிரட்டல் கடிதம்… பதிலுக்கு அவர் என்ன செய்தாருன்னு பாருங்க..!

தமிழ்சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஜெயலலிதா. புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் இவர் தான். நடிகர் திலகம் சிவாஜியுடனும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகையாக இருந்து முதல் அமைச்சராகவும் ஆகி இருந்தார்.

இவரை எல்லாரும் ‘தைரியப் பெண்மணி’ன்னு சொல்வாங்க. சிலர் ‘இரும்புப் பெண்மணி’ன்னு சொல்வாங்க. அந்தளவுக்கு அவரது நடத்தைத் துணிச்சலாக இருக்கும். எப்படிப்பட்ட இக்கட்டான சூழலையும் கண்டு பயந்து ஒதுங்கி விட மாட்டார்.

Advertising
Advertising

துணிச்சலுடன் அதை எதிர்கொள்வார். வெற்றி வாகை சூடுவார். அந்த வகையில் அவர் சினிமாவில் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. அது என்னன்னு பார்க்கலாமா…

சினிமாவில் ஜெயலலிதா கோலோச்சிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் ரசிகர்கள் பலரும் அவருக்குக் கடிதம் எழுதுவார்கள். ஜெயலலிதாவோ எந்த ஒரு கடிதத்துக்கும் பதில் எழுத மாட்டாராம். ஆனால் ஒரு கடிதத்துக்கு அவர் எழுத வேண்டிய சூழல் வந்தது.

ரசிகர் ஒருவர் எழுதிய கடிதம் தான் அது. அந்தக் கடிதத்தில் எழுதிய வாசகம் தான் ஹைலைட். என்னன்னா, ‘நான் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்’ என்றும் அதில் ஒரு தேதியையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘இந்த நாளுக்குள் நீங்க என்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ எனவும் அவர் மிரட்டி இருந்தார்.

ஜெயலலிதாவும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வில்லை. கடந்து போய்விட்டார். சில நாள்கள் கழித்து மீண்டும் அதே ரசிகரிடம் இருந்து கடிதம் வந்தது. ‘இந்த தேதிக்குள் என்னை நீங்க திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என ஒரு தேதியைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார். அதற்கும் ஜெயலலிதா பதில் எழுதவில்லை. மறுபடியும் சில நாள்கள் கழித்து அதே போல இன்னொரு தேதியைக் குறிப்பிட்டு அதே பாணியில் தற்கொலை மிரட்டல் கடிதம் வருகிறது. அப்போது ஜெயலலிதா பதில் எழுதுகிறார் இப்படி.

‘எனக்கு கணவராக வருபவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும். மற்ற விஷயங்களை விட கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது தான் முக்கியம். அப்படி காப்பாற்றாமல் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் உங்களை நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்’ என்று அவரது பாணியிலேயே கேள்வி கேட்டு மடக்கினார். அது அந்த ரசிகருக்கு உண்மையிலேயே ஒரு பாடமாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம்.

Published by
ராம் சுதன்

Recent Posts