முரளி வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை அசோகன் என்பவர் இயக்க எஸ்.வி. தங்கராஜ் படத்தை தயாரித்தார். ஆனால் இந்தப் படம் ஆரம்பிக்கும் போது ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான தங்கராஜ். முரளி மற்றும் வடிவேலுவால் தான் என்னென்ன பிரச்சினைக்கு உட்பட்டேன் என்றும் விஜயகாந்த் தான் எல்லா பிரச்சினையையும் சரி செய்தார் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் தங்கராஜ்.
எப்படியாவது ஒரு தனி ஆளாக படத்தை தயாரித்து சினிமாவில் நல்ல பேர் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்திருக்கிறார் தங்கராஜ். அதனால் மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான ஈ பறக்கும் தளிகா படத்தை தமிழில் எடுக்க முயற்சி செய்தார் தங்கராஜ். அந்தப் படம் தான் சுந்தரா டிராவல்ஸ்.
எத்தனையோ நடிகர்களிடம் ஈ பறக்கும் தளிகா படத்தின் கேசட்டை கொடுத்து பார்க்க சொல்லியிருக்கிறார் தங்கராஜ். ஆனால் படத்தை பார்த்த அனைவரும் இந்தப் படத்தில் நடிக்க மாட்டோம் என்று சொல்லி மறுத்துவிட்டார்களாம். கடைசியாக முரளியிடம் கொடுத்து பார்க்க சொல்லியிருக்கிறார். படத்தை பார்த்ததும் முரளிக்கு படம் பிடித்துவிட்டது. ஆனால் நடிக்க முடியாது என சொல்லியிருக்கிறார்.
ஏனெனில் மலையாளத்தில் திலீப் பிரம்மாதமாக நடித்திருந்தாராம். அவர் போல என்னால் நடிக்க முடியாது என சொல்ல தயாரிப்பாளரோ ‘அதை பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார். கூடவே வடிவேலுவையும் ஒப்பந்தம் செய்து படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பின் நடுவே முரளி மது அருந்திவிட்டு பெரும் பிரச்சினை செய்தாராம். அவருடன் வடிவேலுவும் சேர்ந்து கொள்வாராம். இருவரும் சேர்ந்து தயாரிப்பாளர் தங்கராஜை மிகவும் வேதனைக்கு ஆளாக்கியிருக்கிறார். உடனே தங்கராஜ் விஜயகாந்திடம் பிரச்சினையை சொல்ல நேராக படப்பிடிப்பிற்கே வந்துவிட்டாராம் விஜயகாந்த்.
முரளி மற்றும் வடிவேலுவை பார்த்து சத்தம் போட்டாராம். இது என் படம். ஒழுங்கா இருந்து நடித்துக் கொடுக்கனும் என சொல்லி சத்தம் போட்டு சென்றாராம். அதன் பிறகு ஒழுங்காக படப்பிடிப்பிற்கு முரளியும் வடிவேலுவும் வந்தார்களாம். அதன் பின் ஒரு நாள் இரவு 12 மணி அளவில் மீண்டும் தங்கராஜுடன் பிரச்சினை செய்தாராம் முரளி. நான் நடிக்க மாட்டேன். அப்படி நடிக்கனும்னா உன் மீசையை எடுக்கனும் என முரளி தங்கராஜிடம் கேட்டிருக்கிறார்.
இவருக்கு எப்படியாவது படம் முடியவேண்டும் என்ற எண்ணத்தில் அன்றிரவே மீசையையும் எடுத்துவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் இந்த விஷயத்தை விஜயகாந்துக்கு போன் செய்து சொல்ல இரவு 12 மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்துவிட்டாராம் விஜயகாந்த். தங்கராஜை பார்த்ததும் விஜயகாந்த் முகமெல்லாம் சிவந்து போய்விட்டதாம். முரளியை பார்த்து மிகவும் ஆவேசமாக பேசி சத்தம் போட்டு போனாராம் விஜயகாந்த். இப்படித்தான் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் எடுத்தேன் என ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தங்கராஜ் கூறினார்.
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…