தயாரிப்பாளர் கோவைத்தம்பி மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தமிழ்த்திரை உலகில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக பயணங்கள் முடிவதில்லை, இளமை காலங்கள், நான் பாடும் பாடல், உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், இதயகோவில், உயிரே உனக்காக, செம்பருத்தி ஆகிய படங்களைச் சொல்லலாம்.
இவர் தயாரிப்பில் உழைத்து வாழ வேண்டும் படத்தில் விஜயகாந்த் நடித்தார். ஜோடியாக ராதிகா நடித்தார். அமீர்ஜான் இயக்கியுள்ளார். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்களில் விஜயகாந்த் மாதிரி ஒரு மனுஷனைப் பார்த்ததே இல்லை. அந்தளவுக்கு மனிதாபிமானம் மிக்கவர் என்கிறார் தயாரிப்பாளர் கோவைத்தம்பி. விஜயகாந்த் குறித்து இவர் சொன்னது இதுதான்.
விஜயகாந்த் பற்றிச் சொல்லணும்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு அவரை மாதிரி ஒரு மனுஷனைப் பார்த்ததில்லை. மனிதாபிமான அடிப்படையில என்னென்ன உதவிகள் தயாரிப்பாளருக்கு செய்யணுமோ அத்தனையும் செய்பவர் விஜயகாந்த். வீட்டுக்குப் போனா சாப்பாடு போடாம அனுப்ப மாட்டார் என்கிறார் தயாரிப்பாளர் கோவைத்தம்பி.
விஜயகாந்த்தின் படங்கள் பெரும்பாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தைக் கொடுக்காது. ஒன்றிரண்டு படங்களை வேணும்னா சொல்லலாம். அப்படியே நஷ்டமாக இருந்தாலும் அந்தத் தயாரிப்பாளருக்காகத் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்பவர் தான் கேப்டன்.
அரசியலிலும் சரி. சினிமாவிலும் சரி. சொல்ல வேண்டிய கருத்தைத் தைரியமாகச் சுட்டிக் காட்டுபவர் தான் விஜயகாந்த். அந்த வகையில் துணிச்சல் மிக்க நடிகர். படப்பிடிப்பில் கூட அவருக்கு யாராவது இடையூறு பண்ணித் தடுத்தால் தனி ஆளாகத் தட்டிக் கேட்ட சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியது உண்டு.
விஜயகாந்தைப் பொருத்தவரை சினிமா, அரசியல் என இரண்டிலும் சாதித்தவர். அதே போல இவரிடம் உதவி என யாராவது கேட்டு வந்தால் மறுக்காமல் செய்பவர். அந்த வகையில் இவரைப் போன்ற நடிகர்கள் மறைந்தாலும் இன்னும் எத்தனை காலம் ஆனாலும் போற்றப்படுவார்கள் என்பதே உண்மை.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…