Categories: latest news

விஜயகாந்துக்கும், ரஜினிகாந்துக்கும் போட்டி இருந்ததா? என்ன சொல்றாரு பிரபலம்?

நடிகர்களில் பெயர்ல காந்தம் உள்ள நடிகர்கள் என்றால் ரஜினிகாந்த், விஜயகாந்த், ஸ்ரீகாந்த், நளினிகாந்த், ரவிகாந்த்னு சிலரைச் சொல்லலாம். ஆனால் அவர்களில் ரஜினிகாந்தும், விஜயகாந்தும் தான் மிகவும் பிரபலமானவர்கள்.

ஆரம்பத்தில் சினிமா உலகிற்குள் நுழையும்போது இருவருமே சந்தித்த அவமானங்கள் ஏராளம். கருப்பா இருந்து நட்சத்திர அந்தஸ்துக்கு வர்றது அப்போது சாதாரணமான விஷயமல்ல. ஹீரோன்னா வெள்ளையா, சிகப்பா தான் இருக்கணும்னு நினைத்தவர்கள் தான் அப்போது அதிகம் பேர்.

மாய உலகம்

அதனால் சினிமா உலகே பலருக்கும் கனவு உலகமானது. அது ஒரு மாய உலகம். நமக்குலாம் வாய்ப்பு கிடைக்குமா என பலரும் ஏங்கித் தவித்தனர். ஆனால் இந்த மாயையை முதலில் உடைத்து கருப்புக்கும் சினிமாவில் இடமுண்டு என நிரூபித்தது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். அதன்பிறகு வந்தவர் தான் விஜயகாந்த்.

அபூர்வ ராகங்கள்

பஸ் கண்டக்டராக இருந்து சினிமா மோகத்தில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தவர் ரஜினி. ஆரம்பத்தில் அவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. கமல் படத்தில் வில்லனாகவே வந்தார். அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் பெரிய கேட்டைத் திறந்து தமிழ்சினிமாவுக்குள் நுழைய வைத்தார் பாலசந்தர்.

16 வயதினிலே படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது அவருக்கு பெரிய அளவில் யாரும் சூட்டிங் ஸ்பாட்ல கூட முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கமலுக்கு தான் எல்லா வரவேற்பும் இருந்தது. அவருக்குத் தான் கார் வசதி செய்து கொடுத்தார்கள். படங்களில் அவரது தனித்துவமான ஸ்டைல், வேகமான டயலாக் இவரை சூப்பர்ஸ்டார் ஆக்கியது.

கருப்பு எம்ஜிஆர்

அதே போலத்தான் விஜயகாந்தும் பல அவமானங்களை சந்தித்தார். அதுதான் ‘ஏற்கனவே ஒரு காந்த் இருக்காரே… நீ எதுக்கு’ன்னு கேட்டார்களாம். ஆனாலும் தான் யார் என்று காட்டவேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்து முன்னேறி கருப்பு எம்ஜிஆர், புரட்சிக்கலைஞர் என்று தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் தான் விஜயகாந்த்.

உழவன் மகன் முதலிடம்

அந்தவகையில் ரஜினி, விஜயகாந்த் படங்கள் ஒன்றாக வந்தாலும் அவர்களுக்குள் போட்டி இருக்காது. ரஜினி, கமல் படங்களுக்குத் தான் போட்டி நிலவும். அதே சமயம் இந்த இருவரது படங்களைக் காட்டிலும் விஜயகாந்த் படங்கள் சில சமயம் முந்திக்கொண்டு முதலிடத்தைப் பிடித்து விடும். அப்படித்தான் 87ல் ரஜினிக்கு மனிதனும், கமலுக்கு நாயகன் படமும் வந்தது.

ஆனால் பி, சி சென்டர்களில் முந்திக்கொண்டு சென்றது விஜயகாந்தின் உழவன் மகன் படம். அந்த வகையில் அவரது அபாரவளர்ச்சி இருந்தது. இவர்களுக்குப் பிறகு உள்ள 3ம் இடத்தைப் பிடிக்க அப்போதைய முன்னணி நடிகர்கள் பலரும் போட்டிப் போட்டனர். ஆனால் விஜயகாந்த் பிடித்துவிட்டார்.

நல்ல நட்பு

அந்த வகையில் இவர்களுக்குள் போட்டி இருந்ததா என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். விஜயகாந்துக்கும், ரஜினிகாந்துக்கும் எந்தக்காலத்திலும் போட்டி இருந்தது இல்ல. ஆனா நல்ல நட்பு இருந்தது.

sankaran v

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

51 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

2 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

11 hours ago