Connect with us

Flashback

இது நம்ம ஆளு: பாக்கியராஜ் போட்ட பக்கா பிளான்… படத்தோட வெற்றிக்கு இதான் காரணமாம்..!

தமிழ்சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று போற்றப்படுபவர் கே.பாக்கியராஜ். இப்போ அமரன் படத்துக்கு சாதிய ரீதியாக சர்ச்சை உருவாகி உள்ளது. ஆனா 30 வருஷத்துக்கு முன்னாடியே பெரிய அளவில் பிரச்சனை வரும் என்று சொன்னதை அசால்டாகத் தட்டித் தூக்கியுள்ளார் பாக்கியராஜ். அதுபற்றி பிரபலம் ஒருவர் என்ன சொல்றாருன்னு பாருங்க…

பாக்கியராஜ் ஒரு லைன் எழுதி முடிக்கிறார். அந்தப் படத்தைப் பற்றி கதாசிரியர் கலைஞானம் விவாதம் பண்றார். அவர் பாக்கியராஜிடம் இப்போ இந்தக் கதையைத் தொட்டா பிரச்சனை ஆகிடும்னு எச்சரிக்கிறார். அந்தப் படத்தில் பிராமண சமுதாயம் சார்ந்த கதையை ஒரு சூத்திரர் எடுக்கிறார்.

அப்புறம் இது நல்ல கதை தான். அவங்களைப் பற்றி எதுவும் தவறாக சொல்லவில்லைன்னு பாக்கியராஜ் சொல்றாரு. அப்படின்னா இந்தக் கதையை அதே சாதியைச் சேர்ந்த ஒருவரிடம் போய் கேட்போம் என செல்கிறார்கள். அவரோ கதையைக் கேட்டதும் ‘எக்சலன்ட்’னு சொல்றாரு. அவர் வேறு யாருமல்ல. எழுத்தாளர் பாலகுமாரன்.

உடனே ‘இந்தப் படத்தை நீங்க தான் டைரக்ட் பண்ணனும். வசனம் எழுதணும்’னு பாக்கியராஜ் சொல்ல அவருக்கு ரொம்ப சந்தோஷம். அதுதான் இது நம்ம ஆளு. ஏற்கனவே முந்தானை முடிச்சு படத்தில் அவர் பாக்கியராஜ் உடன் கதை விவாதத்தில் இருந்தாராம்.

ஆனால் தனக்குப் பிரச்சனை வந்துடக்கூடாதுன்னு தான் பாலகுமாரனை டம்மி இயக்குனராகப் போட்டுள்ளார் பாக்கியராஜ் என்றெல்லாம் அப்போது பேசப்பட்டது. இது நம்ம ஆளு கதை என்ன சொல்ல வருதுன்னா எல்லா சாதியினரும் நம்ம ஆளுக தான். இதுல பாகுபாடு எல்லாம் தேவையில்லை என்பதைத் தான் சொல்கிறது. படத்தின் கதை இதுதான்.

அம்மாவோட கண் ஆபரேஷனுக்காக படித்த பட்டதாரி இளைஞன் சென்னைக்கு பணம் சம்பாதிக்க வருகிறான். ஆனால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அப்போ அவசரமா புரோகிதம் பண்ண ஒரு குழு கிளம்பிக் கொண்டு இருக்காங்க. அதுல ஒரு ஆளா போய்ச் சேர்ந்தா ஏதாவது கொஞ்சம் வருமானம் கிடைக்கும்னு உள்ளே நுழையறார் பாக்கியராஜ்.

ஆனா மந்திரமே தெரியாத அவர் எப்படி சமாளிக்கிறார். என்னென்ன சிக்கல் உண்டாகிறது? அதன்பின் அந்த சாஸ்திரிகளின் மகளுடன் காதல் உண்டாகிறது. அது திருமணத்தில் முடிந்ததா என்பது தான் கதை. ஆனால் இந்தப் படத்துல எந்த இடத்துலயும் பிராமண வகுப்பைக் குறையாகச் சொல்லி இருக்க மாட்டார்.

ஆனா அவங்களுக்கு உள்ளேயும் கஷ்டப்பட்டவங்க இருக்கத்தான் செய்றாங்க. தன் மகளுக்காகத் திருமணம் செய்ய நகை இல்லாம கோயில் நகையை ஒருவர் திருடுகிறார். பாக்கியராஜ் அந்தப் பழியை ஏற்றுக் கொள்கிறார். இப்படியும் ஒரு மனிதாபிமான காட்சி படத்தில் உள்ளது. அதே போல இன்னொரு காட்சியில் பிராமண குழந்தை பசித்து அழுகிறது.

அதைத் தாங்க முடியாமல் வேலைக்காரப் பெண் பால் கொடுக்கிறார். அது தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடுமேன்னு அந்தப் பெண் மீது திருட்டுப்பழி சுமத்துறாங்க. அவளோ வாய் பேச முடியாதவள். அப்போ பாக்கியராஜ் வந்து கேட்குறாரு. ஒரு பேச முடியாத பெண்ணை எப்படி திருட்டுப் பழி சுமத்தலாம்னு? கேட்கவும், அந்தப் பெண் ஜாடையில் அவரிடம் நடந்த விவரத்தைக் கூறுகிறாள்.

உடனே ‘ஞானசம்பந்தருக்கும் இது மாதிரி பசி எடுத்தது. பார்வதி ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணாக வந்து பால் கொடுத்தாள். அதை ஏற்றுக் கொள்கிறீர்கள். இந்தப் பெண்ணை ஏற்றுக்க மாட்டீங்களா?’ன்னு கேள்வி கேட்கிறார் பாக்கியராஜ். தியேட்டரே கைதட்டலால் அதிர்கிறது.

அந்த வகையில் இதெல்லாம் தமிழ்சினிமாவில் ஒரு சரித்திரம். இந்தப்படத்துக்கு இசை அமைப்பாளரும் பாக்கியராஜ் தான். படத்தின் வெற்றிக்கு அப்பழுக்கற்ற கதை தான் காரணம்.

மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். 1988ல் இது நம்ம ஆளு படம் ரிலீஸ் ஆனது. பாக்கியராஜ், ஷோபனா, கலைஞானம், பாலகுமாரன், மனோரமா, இடிச்சபுளி செல்வராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பாக்கியராஜின் இசையில் பாடல்கள் சூப்பர். அம்மாடி இதுதான் காதலா, காமதேவன் ஆலயம், கண்ணுரங்கு பொன்மயிலே, நான் ஆளான தாமரை, பச்சை மலை சாமி ஒண்ணு, சங்கீதம் பாட, மார்கழி மாசத்து ஆகிய பாடல்கள் உள்ளன.

google news
Continue Reading

More in Flashback

To Top