நடிப்புன்னு வந்துட்டா நான் தான்டா சிங்கம்னு சொல்ற மாதிரி தான் சிவாஜியோட நடிப்பு இருக்கும். அவரது கம்பீரம், கர்ஜனை எல்லாம் சான்ஸே இல்லை. வேறு யாருக்கும் அப்படி ஒரு ஸ்டைல் வராது. அவரை சிம்மக்குரலோன்னு சொல்வாங்க.
அந்தளவு அட்டகாசமாக அவரது டயலாக் டெலிவரி இருக்கும். சிவாஜியின் நடிப்பு எப்படிப்பட்டது என பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான சேதுராமன் இப்படி சொல்கிறார்.
என்னைப்பொருத்தவரை சிவாஜி இந்தத் தலைமுறையில் தோன்றி இருக்க வேண்டும். அப்படி வந்து இருந்தால் இன்னும் பல மடங்கு புகழ் கிடைத்திருக்கும். முதல் மரியாதை, தேவர்மகன் படங்களே இதற்கு சாட்சி.
சிவாஜிக்கு முன்பு வரை பக்கம் பக்கமான டயலாக்கை மனப்பாடம் செய்து தங்கு தடையின்றி பேசுவதே நடிப்பாக இருந்தது. ஆனால் சிவாஜி தான் முகபாவம், கண்கள், குரலில் ஏற்ற இறக்கங்கள், நடக்கிற நடை என எல்லாவற்றிலும் நடிப்பைக் கொண்டு வந்து அசத்தினார். அதன்பிறகு தான் ஒவ்வொரு நடிகரும் பாடிலாங்குவேஜிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.
அதே போல இயக்குனர் சிவாஜியிடம் கதை சொன்னால் இப்படித்தான் கேட்பாராம். நா யாருடா கதையிலே? போஸ்ட் மாஸ்டரா? ஏழையா, மிடில் கிளாஸா? குடும்பம் திருப்தியா இருக்கா? போஸ்ட் மாஸ்டர் வேலையைப் பிடிச்சித்தான் பண்றேனா?
வேற வழியில்லையேன்னு பண்றேனா? கோபக்காரனா? அவசரக்காரனா? முட்டாளா, அமைதியானவனா? இல்ல அடுத்தவங்க கிண்டல் பண்ணா எப்படி ரியாக்ட் பண்ணனும்? பாராட்டுனா என்ன செய்யணும், பாசமா இருந்த எப்படி நடிக்கணும்? நடிக்கும்போது கைகளை எப்படி வச்சிருக்கணும்?
எல்லாம் இதை வச்சித்தான்டா நம்மோட நடிப்பை முடிவு பண்ணனும் என்று விவரமாகக் கேட்டு தனது கதாபாத்திரத்தின் தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்வார். அதன்பிறகு தான் அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி நடிப்பார்.
அப்போது அவர் அந்தக் கேரக்டராகவே மாறிவிடுவார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சிவாஜியைப் பொருத்தவரை நடிகன் தெரியக்கூடாது. கேரக்டர் தான் தெரியவேண்டும்.
Aishwarya rai:…
Amaran: ராஜ்கமல்…
நடிகர் சிம்பு…
Biggboss 8: விஜய்…
தக் லைஃப்…