இயக்குனர் பிரேம்குமாரின் அற்புதமான படைப்பு மெய்யழகன் மட்டுமல்ல. அதற்கு முன் வந்த 96 படமும்கூட. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, திரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இயக்குனர் படத்திற்காகப் பட்ட கஷ்டங்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…
96 படத்தின் வெற்றியைக் கொண்டாட முடியல. அது மகத்தான வெற்றி. அந்தப் படம் ரிலீஸ் ஆன போது பைனான்ஸ் பிரச்சனையில இருந்தது. விஜய் சேதுபதி தன்னோட மொத்த சம்பளத்தையும் அந்தப் படத்துக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம்.
அதுவே பெரிய வேதனையா இருந்தது. முதல்ல ஒரு நாள் தான் ஸ்கிரீன்ல இருக்கும்னு சொன்னாங்க. அப்புறம் 3 நாள். அடுத்து ஒரு வாரம். அதைத் தாண்டிப் பார்த்தா கதை திருட்டு பிரச்சனை. அது மரணத்தை விடக் கொடூரமானது. அது உண்மை இல்லன்னு எல்லாருக்கும் தெரியும்.
அந்த விஷயம் அம்மா காதுக்குப் போக, அவங்களும் உடல்நிலை சரியில்லாம போயிட்டாங்க. அது எப்படி இருக்கும்? வாழ்க்கையோட கொடூரமான விஷயம்னா அதுதான். இன்னொன்னு அதைச் செய்றது மரியாதைக்குரிய நபர். அந்தக் கஷ்டத்தை தாங்கவே முடியல. அதை எல்லாம் தாண்டி வந்தாச்சு. மீண்டாச்சு. அதுக்கு பதில் சொல்லியாச்சு.
ஆனா உண்மையிலேயே தனிப்பட்ட முறையில மீள முடியல. பணத்தை மீட்டு எடுத்தாச்சு. 33வது நாள் டிவில படத்தைப் போட்டாங்க. அதையும் தாண்டி ஓடுச்சு. திரும்ப 77வது நாள் டிவில போட்டாங்க. அதையும் தாண்டி ஓடி 100வது நாள் தான் உண்மையிலேயே அதைக் கொண்டாடக்கூடிய தருணம் அமைஞ்சது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2018ல் வெளியான படம். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் பிரமாதம். படத்தைத் தயாரித்தவர் நந்தகோபால். விஜய்சேதுபதி, திரிஷா ஜோடி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனது. அவர்களுடன் தேவதர்ஷினி அசத்தலான ரோலில் நடித்து இருந்தார்.
ரீயூனியன் தான் படத்தின் மையக்கரு. பள்ளிப் படிக்கும்போது நடந்த சுவாரசியமான சம்பவங்களை ஒவ்வொரு இடங்களாகப் பார்க்கும்போது விஜய்சேதுபதி அசை போடுகிறார். இளம் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட படம் இது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…