More
Categories: Flashback

SPB Ilaiyaraja: தப்பா நினைச்சுப் பாடிய எஸ்.பி.பி… இளையராஜா காட்டிய மேஜிக்… பாடலோ சூப்பர் டூப்பர் ஹிட்..!

இளையராஜாவின் இசையில் பாடும் நிலா பாலு நம்ம எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் ஒரு பாடலைச் சிச்சுவேஷன் தெரியாமல் தப்பாகப் பாடிவிட்டார். அதாவது அது சந்தோஷமான பாடல்னு நினைச்சி சிரிச்சிக்கிட்டே பாடி விட்டார்.

படத்தில் பார்த்தால் தான் அது சோகப்பாடல் என்றே தெரிந்ததாம். அது என்ன பாடல்? அந்தப் பாடல் உருவான கதை என்னன்னு பார்க்கலாமா… இதுபற்றி அவரது மகன் எஸ்.பி.பி.சரண் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க…

Advertising
Advertising

‘நிலாவே வா’ என்ற பாடல் தான் அது. இளையராஜா ரெக்கார்டிங் செய்யத் தயார். அப்பாவிடம் யாரும் அந்தப் பாடலுக்கு என்ன சூழல்னு சொல்லவே இல்லை. டைரக்டர், அசிஸ்டண்ட்னு யாருமே அங்கு இல்லை. அப்பா ஸ்டூடியோவில் பிராக்டிஸ்சும் செய்துவிட்டார்.

ஆனால் படம் பார்த்ததும் தான் அது சோகப்பாட்டு தான் என்பதே தெரிந்ததாம். இந்தப் பாடலைக் கேட்டதும் அப்பா இப்படி சொன்னாங்களாம். ‘நான் இதை ஒரு ரொமான்டிக் பாடல்னு தான் நினைச்சேன். அதான் இதை சிரிச்சிக்கிட்டே பாடினேன்.ஆனா சோகப்பாட்டுன்னு தெரியாம தான் பாடினேன். என்கிட்ட யாருமே சிச்சுவேஷனை சொல்லல. சொன்னா அதுக்கு ஏற்ற மாதிரி பாடி இருப்பேன்’ என்றாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடலை இப்போது கேட்டுப் பார்த்தாலும் அதுல எஸ்பிபியின் ஜாலி மூடு இருக்கும். ஆனா அதே நேரத்துல இளையராஜா அந்த மூடைத் தன் இசையால் மாற்றி சோகத்திற்குக் கொண்டு வந்து இருப்பார். மைக் மோகனும் சோகமான முகபாவனையுடன் பாடியது எஸ்பிபி செய்த தவறை நமக்கு உணர்த்தாமல் போய்விட்டது. இப்படி எல்லாம் கூட அப்போ சம்பவம் நடந்துள்ளதா என்று எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

1986ல் மணிரத்னம் இயக்கத்தில் மோகன், கார்த்திக், ரேவதி நடித்த சூப்பர்ஹிட் படம் மௌனராகம். இந்தப் படத்தில் இளையராஜா இசை அமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட். ஓஹோ மேகம் வந்ததோ, நிலாவே வா, சின்ன சின்ன வண்ணக்குயில், பனிவிழும் இரவு, மன்றம் வந்த தென்றலுக்கு ஆகிய இனிமையான பாடல்கள் உள்ளன.

Published by
ராம் சுதன்

Recent Posts