More
Categories: Flashback

கண்ணதாசனைப் பார்த்து எரிச்சல் அடைந்த இளையராஜா… அது சூப்பர்ஹிட் பாடல் ஆச்சே..!

கண்ணதாசனிடம் ஒரு படத்திற்குப் பாடல் எழுதக் கேட்டால் ரொம்ப சங்கடம் தான் போலும். எரிச்சல் வர்ற மாதிரி கேட்பாராம். என்ன சிச்சுவேஷன்னு கேட்டுட்டு துப்புவாராம். இதை வேறு யார் சொன்னாலும் நம்பாமல் இருக்கலாம். ஆனால் இளையராஜாவே சொல்லி விட்டாரே. வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

கண்ணதாசன் சிச்சுவேஷன் என்னன்னு கேட்பாராம். கேட்டதும் சிகரெட் பிடிப்பாராம். அப்புறம் துப்புவாராம். சிச்சுவேஷன் பிடிக்காம துப்புறாரா எதுக்குன்னே தெரியாதாம்.

Advertising
Advertising

இளையராஜா திரைத்துறையில் அறிமுகமான காலகட்டம். அவர் டியூனை வாசித்து முடிக்கிறதுக்குள்ளேயே பாடலின் பல்லவியைச் சொல்லி விட்டாராம் கண்ணதாசன். எம்.எஸ்.வி. கோலோச்சிய காலகட்டத்தில் அன்னக்கிளி மூலம் அடியெடுத்து வைத்தார் இசைஞானி. முதல் படத்திலேயே முத்திரைப் பதித்தார்.

தொடர்ந்து படத்தில் கதையே இல்லைன்னாலும் இளையராஜாவைப் போடுப்பா. படம் ஹிட் ஆகிடும்னு சொல்வாங்களாம். அதனாலேயே அவரது ஆபீஸ் முன்னாடி எப்பவும் கூட்டமாக இருக்குமாம். என்னன்னா கால்ஷீட் கேட்டு வர்ற கூட்டமாம்.

அந்த நேரத்தில் வந்த ஒரு படம் தான் நிறம் மாறாத பூக்கள். பாக்கியராஜ் கதை எழுத, பாரதிராஜா இயக்கினார். சுதாகர், ராதிகா, விஜயன், ரதின்னு பலர் நடித்த படம். பஞ்சு அருணாச்சலம், கங்கை அமரன் பாடல்களை எழுதினாங்க.

ஆனால் அந்தப் படத்தில் ஒரு பாடலைக் கண்ணதாசன் எழுதினார். ‘ஆயிரம் மலர்களே’ பாடல் தான் அது. இதற்காக இளையராஜா கண்ணதாசனிடம் போய்க் கேட்டுள்ளார். என்ன சிச்சுவேஷன்னு கேட்பாராம். அப்படிக் கேட்குறதே ரொம்ப எரிச்சலாக இருக்குமாம் இளையராஜாவுக்கு. ஆனாலும் இயக்குனரைக் கண்டுகொள்ளவே மாட்டாராம்.

அப்புறம் இளையராஜாவிடம் ‘டியூன் போட்டுருக்கியா?, நான் பாட்டு எழுதணுமா?’ன்னு கேட்டாராம். ‘டியூன் போட்டுருக்கேன்’னு சொன்னதும் வாசிக்கச் சொன்னாராம். ஆனா இளையராஜா வாசித்து முடிக்கிறதுக்குள்ள பாடல் வரிகளைச் சொல்லி விட்டாராம் கண்ணதாசன்.

ஆனா இளையராஜாவுக்கு கொஞ்சம் சந்தேகம். நான் பாடும் டெம்போ வேற. பாடல் வரிகள் வேறயா இருக்கேன்னு. அப்புறம் எப்படி இது சிங்க் ஆகும்னும் நினைச்சிருக்காரு. ஆனால் அதைப் பாடிப்பார்த்தால் தான் தெரியுதாம். அப்படியே மேட்ச்சா இருந்தது என ஆச்சரியப்பட்டாராம் இளையராஜா..

Published by
ராம் சுதன்