More
Categories: Flashback

அரை நாளுக்குள் 21 பாடல்கள்… இளையராஜா சாதனையின் நாயகன் தான்..!

இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்திற்கு அடிமையாகாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் அவரது பாடல்கள் எல்லாமே அற்புதம் தான். 80ஸ் கிட்ஸ்கள் மட்டுமல்லாமல் தற்போது வரை இளையராஜா பாடல்கள்னாலே ஒரு கிரேஸ் இருக்கத் தான் செய்கிறது.

அந்தக் காலத்தில் இளையராஜா பீக்கில் இருந்த போது அவரது கால்ஷீட்டுக்காகத் தயாரிப்பாளர்கள் அலைந்து திரிவார்களாம். 1990ல் தயாரிப்பாளரும், விநியோகஸதருமான கேயார் வந்து இளையராஜாவைப் பார்க்க வருகிறார்.

Advertising
Advertising

அதுவும் தான் இயக்கப்போவதாக இளையராஜாவிடம் சொல்கிறார். இவர் ஏன் இயக்கப் போகிறார்னு இளையராஜாவுக்கு சந்தேகம். அப்புறம் தான் தெரிகிறது. அவர் பஞ்சு அருணாச்சலத்தின் சிபாரிசு என்று. அதன்பிறகு இளையராஜாவும் அவரது படத்திற்கு இசை அமைக்க ஒப்புக்கொள்கிறார்.

அவர் இயக்கிய அந்தப் படம் தான் ஈரமான ரோஜாவே. படத்தின் கம்போசிங்கிற்கு வெளியூர் போகலாம்னு அவர் சொல்கிறார். அதற்கு இளையராஜாவோ கொச்சின் போகலாம் என்கிறார். கடைசி நேரத்தில் ரெயிலில் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லையாம். இளையராஜாவைப் பார்த்த டிக்கெட் பரிசோதகர் நீங்க எங்கே வேணாலும் உட்காருங்க சார்னு சொல்லி விடுகிறார். அடுத்த நாள் காலை கொச்சின் வந்தாச்சு.

அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் காலை 7.30 மணிக்கு எல்லாம் கேயாருக்கு அழைப்பு வருகிறது. இவர் போனால் அவருக்கு ஒரே அதிர்ச்சி. இளையராஜா தயாராக இருக்கிறார். ‘கம்போசிங் போகலாமா…’ன்னு கேட்கிறார். ‘இப்ப தானே வந்துருக்கோம். ரெஸ்ட் எடுங்க.. சுத்திப் பார்ப்போம். அப்புறம் ‘அதெல்லாம் வேணாம். முதல்ல வந்த வேலையை முடிப்போம. கம்போசிங் போகலாம்’னு சொல்கிறார்.

அப்புறம் கேயாரும் ஒவ்வொரு சிச்சுவேஷனா சொல்றாரு. 6 பாடல்கள் ரெடியாயிடுச்சு. அதே நேரம் இன்னும் 2 படங்களுக்கு அழைப்பு வருகிறது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபு, குஷ்பூ நடிக்கும் மைடியர் மார்த்தாண்டன்.

அவரும் சிச்சுவேஷன் சொல்ல அந்தப் படத்திற்காக 9 பாடல்கள் ரெடியாகிறது. அடுத்து இளையராஜாவின் நீண்டகால நண்பர் பாரதிராஜாவுக்கு ஒரு படம். நாடோடித் தென்றல். அதற்கு சிச்சுவேஷன் சொல்ல 6 பாடல்கள் தயாராகிறது. இப்படியே ஒரே நாளில் 21 பாடல்களுக்கு டியூன்கள் ரெடியாகிறது.

ஆனால் என்ன ஒரு ஆச்சரியம். இவை அனைத்தும் மதியத்திற்குள் முடிந்து விட்டதாம். அதன்பிறகு தான் கொச்சினையேச் சுற்றிப் பார்க்க கிளம்பினாராம் இளையராஜா. வந்த வேலை தான் முக்கியம் என்றதால் தான் இளையராஜா இந்தளவு இமாலய வளர்ச்சியை அடைய முடிந்தது.

Published by
ராம் சுதன்

Recent Posts