அப்படி ஒரு காட்சியில் நடித்த ஜெயம் ரவி பட நடிகை… அப்புறம் அழுது என்ன பிரயோஜனம்?

Published on: November 7, 2024
---Advertisement---

ஜெயம் ரவிக்கு இந்தத் தீபாவளிக்கு ‘பிரதர்ஸ்’ என்ற படம் வெளியாகி உள்ளது. இதற்கு முன் அவருக்கு அந்தப் பெயர் வரக் காரணமே ஜெயம் படம் தான். ரொம்பவே சூப்பரான படம இது.

இந்தப் படத்தின் கதாநாயகி சதா. அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 2002ல் தெலுங்கில் ஜெயம் படத்தை இயக்கியவர் தேஜா. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜெயம் ரவியை வைத்து அவரது அண்ணன் மோகன்ராஜா ஜெயம் என்ற படத்தை இயக்கினார்.

இந்தப் படத்திலும் சதா தான் கதாநாயகி. வில்லன் கோபிசந்த். அதே தெலுங்குபட இயக்குனர் தேஜாவின் இயக்கத்தில் அகிம்சா என்ற தெலுங்கு படத்தில் சதா நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட கசப்பான சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

அந்தப் படத்தில் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நடித்துள்ளார். ஒரு காட்சியில் அவர் சதாவின் கன்னத்தில் நக்குவது போன்ற ஒரு சீன் எடுக்கப்பட்டதாம். ‘அந்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்’ என்று சதா கூறியுள்ளார்.

அதற்கு கதைக்கு ரொம்ப அவசியமான சீன். அப்படின்னு சொல்லி நடிக்க வைத்தாராம் இயக்குனர் தேஜா. அந்தக் காட்சி எடுக்கப்பட்டு முடிந்ததும் வீட்டுக்குப் போய் அழுதாராம்.

இந்தக் காட்சியை இப்போ நினைத்தாலும் கவலையாக இருக்கிறது என்கிறார் சதா. அப்படி இப்படின்னு சொல்லி நடிக்கச் சொல்லிட்டாரு இயக்குனர். அப்பவே சுதாரிக்க வேணாமா… நடிச்சதுக்கு அப்புறமா அதுக்காக வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் என்பதே அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

சதாவைப் பொருத்தவரை மாதவன், அஜீத், விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். மாதவனுடன் பிரியசகி, எதிரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜீத்துடன் திருப்பதி படத்திலும், விக்ரமுடன் அந்நியன் படத்திலும் சதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment