80களில் தீபாவளி என்றாலே ஒரு குதூகலம் தான். 10க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகும். முக்கியமாக கமல், ரஜினி படங்களுக்குள் கடும்போட்டி நிலவும். அந்த வகையில் கமல் படங்களில் தீபாவளியையொட்டி வந்து பட்டையைக் கிளப்பிய படங்களையும், சோடை போன படங்களையும் பார்க்கலாமா…
1974ல் அவள் ஒரு தொடர்கதை பாலசந்தர் இயக்கிய இந்தப் படம் 100 நாள் ஓடியது. 1974ல் பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு சூப்பர்ஹிட். பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை அள்ளியது. 1978ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் சிகப்பு ரோஜாக்கள் வெளியானது. கமல், ஸ்ரீதேவி நடித்த கிரைம் திரில்லர் படம். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ருத்ரய்யா இயக்கத்தில் அவள் அப்படித்தான் வெளியானது. கமல், ஸ்ரீபிரியா, ரஜினி நடித்த படம். மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு போகவில்லை.
1978ல் பாலசந்தர் இயக்கத்தில் தப்பு தாளங்கள். கமல், ரஜினி, சரிதா. இது தோல்விப்படம். இந்தப் படத்தில் கமல் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். அதே ஆண்டில் கமல், ஸ்ரீதேவி நடித்த படம் மனிதரில் இத்தனை நிறங்களா? இந்தப் படம் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை. இப்படி ஒரே தீபாவளிக்கு 4 கமல் படங்கள் வெளியானதும் இந்த வருடம் தான்.
1979ல் கிருஷ்ண பஞ்சு இயக்கத்தில் நீல மலர்கள். கமல், ஸ்ரீதேவி நடித்த இது ஆவரேஜ் படம். 1980ல் பாலசந்தர் இயக்கத்தில் வறுமையின் நிறம் சிவப்பு பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன். 100 நாள் ஓடியது. 1982ல் தாமோதரன் இயக்கத்தில் கமல், ஸ்ரீபிரியா நடித்த படம் பகடை பனிரெண்டு. இது சரியாகப் போகவில்லை. ஆவரேஜ் படம்.
1986ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தூங்காதே தம்பி தூங்காதே படம் ரிலீஸ். 200 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. 1984ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் எனக்குள் ஒருவன் ரிலீஸ் ஆனது. கமல், ஷோபனா நடித்தனர். ஆவரேஜ் தான். 1984ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்த படம் ஜப்பானில் கல்யாண ராமன். 100 நாள்கள் கடந்து ஓடியது. 1986ல் பாலசந்தர் இயக்கத்தில் புன்னகை மன்னன் ரிலீஸ். இது ஒரு வெள்ளி விழா படம்.
1987ல் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன். 275 நாள் கடந்து ஓடியது. 1989ல் பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல், பிரபு நடித்த படம் வெற்றி விழா. அமலா, குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸில் கலெக்ஷன் கொடுத்த படம்.
1990ல் சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படம் மைக்கேல் மதன காமராஜன். கமல், ரூபினி, குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர். 4 வேடங்களில் அட்டகாசமான காமெடி கலந்து வந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 200 நாள் கடந்து ஓடியது.
1991ல் சந்தானபாரதி இயக்கத்தில் குணா வெளியானது. கமல், ரேகா நடித்த இந்தப் படம் 100 நாள்களைக் கடந்து ஓடியது. ஆனாலும் இது தோல்வின்னு தான் சொல்றாங்க. 1992ல் பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி நடித்த படம் தேவர் மகன். மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம். 200 நாள்கள் கடந்து ஓடியது.
1994ல் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் நம்மவர் படம் வெளியானது. கமல், கௌதமி நடித்த படம். இது சூப்பர்ஹிட். 1995ல் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியானது குருதிப்புனல். கமல், அர்ஜூன், கௌதமி நடித்தனர். பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனைக் கொடுத்தது. 1996ல் கமல், மீனா, ஜெமினிகணேசன், நாசர் நடித்த படம் அவ்வை சண்முகி.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். 200 நாள் கடந்து ஓடியது. 2000த்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம் தெனாலி. கமல், ஜோதிகா, ஜெயராம் நடித்த படம். 175 நாள் ஓடி வசூல் சாதனை படைத்தது. 2004ல் சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய படம் ஆளவந்தான்.
முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடங்களில் நடித்த மிகப்பெரிய ஆக்ஷன் படம். ஆனாலும் தோல்வியைத் தழுவியது. இந்த வருடம் கமலின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…