உலகநாயகன் கமல் நடிப்பில் 1982ல் ஏவிஎம் தயாரிக்க வெளியான படம் சகலகலா வல்லவன். இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. குறிப்பாக படத்தின் பாடல்கள் அனைத்தும் இளையராஜாவின் கைவண்ணத்தால் சூப்பர்ஹிட் ஆனது.
இந்தப் படத்தில் அப்போது இளசுகளைத் தூங்கவிடாமல் செய்த பாடல்கள் 2. ஒன்று ‘நேத்து ராத்திரி யம்மா’, மற்றொன்று ‘நிலா காயுது’. இந்தப் பாடல்களில் ஒன்றான நிலா காயுது படம் முதலில் கமல் படத்தில் இடம்பெறவில்லையாம். ஆச்சரியமாக இருந்தாலும் அது தான் உண்மை.
1981ல் காரைக்குடி நாராயணன் இயக்கிய படம் நல்லது நடந்தே தீரும். இந்தப் படத்தில் சுமன், சசிரேகா உள்பட பலர் நடித்துள்ளனர். முதலில் இந்தப் படத்தில் தான் நிலா காயுது பாடல் இடம்பெற்றதாம். சென்சாருக்குச் சென்றபோது பல காட்சிகள் கத்திரிகளுக்கு இரையானதாம்.
அதனால் பாடலை எடுத்துருங்கன்னே சொல்லிட்டாங்களாம். இதனால் இயக்குனர் அந்தப் படத்தில் இருந்த இந்தப் பாடலை தூக்கி விட்டாராம். ஆனால் இளையராஜா அதற்கு அடுத்த வருடமே வெளியான சகலகலா வல்லவன் படத்தில் இந்தப் பாடலை சேர்த்து விட்டார்.
ஆனால் முறைப்படி காரைக்குடி நாராயணனிடம் அனுமதி பெற்றுத் தான் இத்தனை வேலைகளும் நடந்தது. ஆனால் என்ன ஒரு அதிசயம். கமல் படத்தில் பாடல் சூப்பர்ஹிட். இந்தப் பாட்டை எழுதியது யார் தெரியுமா? யாராக இருக்கும்? வாலிபக் கவிஞர் வாலி தான்.
பாடலைப் பாடியது மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி குழுவினர். இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் நம்மை சொக்க வைக்கும் ரகம் தான். இந்த நிகழ்வைப் பார்க்கும்போது இதே பாடலை சுமன் படத்தில் மட்டும் ஏன் கத்தரி போட்டார்கள் சென்சார் குழுவினர் என்று எண்ணத் தோன்றுகிறது.
கமல் படத்திற்கு மட்டும் எப்படி தப்பியது? ஒருவேளை காட்சியை கமல் படத்தைக் காட்டிலும் ரொம்பவும் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் எடுத்து இருப்பார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
‘நேத்து ராத்திரி யம்மா’ பாடலில் கமலும், சில்க்கும் குஜாலாவாக ஆடி கிளுகிளுப்பை ஏற்றுவார்கள். பாடல் முடிந்து அடுத்த 5 நிமிடத்திற்குள் ‘நிலா காயுது’ பாடல் வந்து விடும். இதில் கமலும், அம்பிகாவும் செய்யும் ரொமான்ஸ் முந்தையப் பாடலைக் காட்டிலும் ‘கிக்’கை அதிகமாக இறக்கி இருக்கும்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…