தமிழ்த்திரை உலகில் எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அற்புதமாக நடிப்பவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் படத்தில் செய்யும் குறும்பான லீலைகள் ரசிகர்களைப் பெரிதும் கவரும்.
கிழக்கு வாசல், வருஷம் 16, மௌன ராகம் படங்களை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். இவர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. அது சம்பந்தமாக ஒரு கேள்வி பதில் தான் இது.
நாடோடித் தென்றல் படத்துக்கு கார்த்திக் சூட்டிங்கிற்கு கரெக்டான நேரத்துக்கு வந்தாரான்னு வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி பதில் தெரிவித்துள்ளார்.
நாடோடித் தென்றல் படத்தின் படப்பிடிப்புக்கு முதல் நாளே கார்த்திக் வரவில்லை. படத்தின் இயக்குனர் பாரதிராஜா. இவர் முதல் 3 நாள்களுக்குக் கார்த்திக் சம்பந்தமான காட்சிகளைத் தான் படமாக்கத் திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் கார்த்திக் வராமலேயே இருந்தார். அதனால ஓரிரண்டு நாள்களுக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் நாங்கள் முழித்துக் கொண்டு இருந்தோம் என்கிறது தான் உண்மை. நான்கு நாள்கள் கழித்து கார்த்திக் படப்பிடிப்புக்கு வந்தார். அவர் வந்ததுமே நிச்சயம் இன்னைக்கு ஒரு பெரிய பிரளயமே இருக்குன்னு எல்லாரும் நினைச்சிக்கிட்டு இருந்தோம்.
ஆனால் அதற்கு மாறாக கார்த்திக்கை பாரதிராஜா கட்டிப்பிடித்துக் கொண்டு ‘உன் உடம்புக்கு என்னாச்சு? ஏன் உன்னால முதல் நாள் படப்பிடிப்புக்கு வர முடியல’ன்னு ஆறுதலா கேட்டுக் கொண்டு இருந்தார். ஆனா அவரை ஒரு வார்த்தைக் கூட திட்டவில்லை. இது எங்க எல்லாருக்குமே ஆச்சரியமாக இருந்தது.
இது மாதிரி சம்பவங்களை நான் பல இயக்குனர்களோட படங்களில் பார்த்திருக்கேன். அவர் வர்ற வரைக்கும் அந்தளவுக்கு அந்த இயக்குனர் ஆத்திரமா இருப்பாரு. ஆனா கார்த்திக் வந்த உடனே அந்த நிலைமை இருக்கே அது அப்படியே அடியோடு மாறிவிடும்.
கார்த்திக்கோட இடம் இப்போ காலியா இருந்தால் தானே வேறொரு நடிகர் அதை நிரப்ப முடியும்? அவரது இடத்தைப் பல நடிகர்கள் நிரப்பி விட்டார்கள் என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1992ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் கார்த்திக், ரஞ்சிதா, நெப்போலியன் உள்பட பலர் நடித்த படம் நாடோடித் தென்றல். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்.
இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா. ஒரு கணம் ஒரு யுகமாக, சந்தன மார்பிலே, யாரும் விளையாடும் தோட்டம், மணியே மணிக்குயிலே, ஏலமலை காட்டுக்குள்ளே ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். வசூலிலும் பட்டையைக் கிளப்பியது என்றே சொல்லலாம்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…