More
Categories: Cinema News Flashback

தசாவதாரம் பட பட்ஜெட் அப்பவே இவ்வளவு கோடியா?!.. ஷாக் கொடுக்கும் கே.எஸ்.ரவிக்குமார்!..

Dasavatharam: கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் கமல்ஹாசன் 10 கெட்டப்புகளில் நடித்து 2008ம் வருடம் வெளியான திரைப்படம் தசாவதாரம். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கமலே எழுதியிருந்தார். நாட்டையே அழிக்கவல்ல ஒரு கிருமி வைரஸ் வில்லனின் கையில் கிடைக்கக் கூடாது என்பதற்காக கமல் எடுக்கும் முயற்சிகள்தான் இந்த திரைப்படம்.

விஞ்ஞானி, ஆந்திர போலீஸ் அதிகாரி, சமூக ஆர்வலர், பாடகர், ஒரு முஸ்லீம் வாலிபர், ஜப்பான் நாட்டை சேர்ந்தவர், அமெரிக்க வில்லன், வயதான பாட்டி, பெருமாள் பக்தி கொண்ட பிராமணர், அமெரிக்க அதிபர் என 10 கெட்டப்புகளில் கமல் அசத்தியிருந்தார். அத்தனை கெட்டப்புகளுக்கும் ஏற்றபடி கதை, திரைக்கதை அமைத்திருந்தார்.

Advertising
Advertising

இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்ச்ந்திரன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் கமலுடன் அசின், மல்லிகா ஷெராவத், எம்.எஸ்.பாஸ்கர், நாகேஷ், நெப்போலியன் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் ஹிமேஷ்ம் ரேஷாமியா ஆகிய இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தனர்.

இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதோடு, கமலின் நடிப்பை பலரும் சிலாகித்து பேசினார்கள். இந்நிலையில், சமீபத்தில் ஊடகமொன்றில் பேசிய அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். கமல் சார் இந்த கதையை என்னிடம் சொன்னபோது ‘இது என்னால் செய்ய முடியுமா?’ என யோசித்தேன்.

ஆனால், கமல் சார் கொடுத்த நம்பிக்கையில் சம்மதம் சொன்னேன். ஆனால், படத்தை துவங்கிய போது எல்லாமே மிகவும் சவாலாக இருந்தது. இந்த படத்திலிருந்து விலகி விடலாம் என 3 முறை யோசித்தேன். படத்திற்கு முதலில் போட்ட பட்ஜெட் 15 கோடி. ஆனால், அதை விட இரண்டு மடங்கு அதிகரித்து 45 கோடி செலவு ஆனது. தயாரிப்பாளார் கோபப்பட்டார்.

ஆனால், கமலோ ஒவ்வொரு வேடத்திற்கும் அவ்வளவு மெனக்கெட்டார். கமலின் ஒவ்வொரு வேடமும் தனி எபிசோட், அது இல்லாமல், பாட்டி கமலை குள்ளமாக காட்ட வேண்டும். ஒரு கமலை உயரமாக காட்ட வேண்டும். அதற்கு கம்பியூட்டர் கிராபிக்ஸ் செய்ய வேண்டும். இன்னும் சொல்லப்போனால் 80 சதவீதம் கிராபிக்ஸ் பணிகள் முடிந்தநிலையில் நேரம் இல்லாமல் படத்தை அப்படியே வெளியிட்டோம். நான் இயக்கியதிலேயே எனக்கு மிகவும் கடினமான படம் எனில் அது தசாவதாரம் மட்டுமே’ என ரவிக்குமார் சொல்லி இருக்கிறார்.

Published by
ராம் சுதன்

Recent Posts