MGR: மக்கள் மனதில் இன்றுவரை ஒரு நீங்கா இடம் பிடித்திருப்பவர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அரசியல்வாதியாக நடிகராக ஒரு பக்கம் உயர்ந்து நின்றாலும் நல்ல மனிதர் என்பதில் என்றுமே அவர் சிறப்புற்று இருந்திருக்கிறார். அவர் மறைந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் தாண்டிய நிலையிலும் எம்ஜிஆரின் புகழை பாடாதவர்கள் இல்லை. அவரின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்து வருகின்றனர்.
ஒருமுறை ஹிந்தி நடிகர் தர்மேந்திரா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையின் ஒரு கடலோரப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டரில் நடக்கும் சண்டை காட்சி என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஹெலிகாப்டரில் தர்மேந்திராயுடன் சண்டைக்காட்சியில் ஒரு ஸ்டண்ட் கலைஞர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய கைப்பிடி தளர்ந்து சுமார் 50 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு யூனியன் சார்பில் போதிய நிதி உதவி செய்யாததை ஷெட்டி என்னும் பிரபல ஸ்டண்ட் கலைஞர் அவரது உறவினரான தென்னிந்திய ஸ்டஸ்ட் மாஸ்டரான சியாம் சுந்தரிடம் கூறியிருக்கிறார்.
ஷியாம் சுந்தர் இதை எம்ஜிஆரிடம் தெரிவித்திருக்கிறார். இதை அறிந்த எம்ஜிஆர் மிகவும் வருத்தமுற்று உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாயை சியாம் சுந்தரிடம் கொடுத்து உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞரின் குடும்பத்திற்கு உதவி செய்ய சொல்லியிருக்கிறார்.
இங்குதான் எம்ஜிஆர் உயர்ந்து நிற்கிறார். இந்தியாவில் எத்தனையோ திரைக்கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் எம் ஜி ஆர் மட்டும் தான் ஸ்டண்ட் கலைஞர்களின் உற்ற தோழனாக இருந்துள்ளார் என்றால் எந்த அளவுக்கு உயர்ந்த வள்ளல் தன்மை கொண்ட பரந்த மனப்பான்மை கொண்டவராக எம்ஜிஆர் இருந்திருப்பார் என்று நம்மால் உணர முடிகிறது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…