More
Categories: Cinema History latest news

நேஷனல் அவார்டு மீது எனக்கு ஆசை இல்ல… அதுக்கு காரணம் அவர்தான்… என்ன பெருந்தன்மைபா நம்ம தலைவருக்கு…!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். உலக நாயகன் என்று அழைக்கப்படுவர் கமலஹாசன். தற்போது விஜய், அஜித் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக பார்க்கப்பட்டு வரும் நிலையில் 90ஸ் காலகட்டத்தில் கமலஹாசன் ஒரு தூண் என்றால், நடிகர் ரஜினிகாந்த் மற்றொரு தூணாக இருந்தவர்கள்.

கமலஹாசன் சிறுவயதில் இருந்தே படத்தில் நடித்து வந்தாலும் அவருக்கு பின் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த் டாப் நடிகராக மாறிவிட்டார். ஆனால் இருவருக்குள்ளும் எந்த ஒரு போட்டியும் பொறாமையும் இருந்தது கிடையாது. இவர்களுக்குள் இருந்த நட்பு குறித்து பல இடங்களில் இவர்கள் இருவருமே பேசி இருக்கிறார்கள்.

எங்களைப் போன்று யாரும் இருக்க முடியாது. என்னையும் ரஜினியும் போல நட்புடன் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான போட்டியுடன் இருக்கக்கூடிய நடிகர்களை பார்ப்பது என்பது கடினம் என பலமுறை கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் பல திரைப்படங்களில் இவர்கள் இணைந்தும் நடித்திருக்கிறார்கள் .நடிகர் ரஜினிகாந்த் பேட்டிகளில் கமலஹாசனை எப்போதும் உயர்த்தி தான் பேசுவார்.

ஒருமுறை அவர் கூறிய போது கமலஹாசன் நினைத்திருந்தால் நான் இந்த இடத்தில் இல்லாமல் இருந்திருப்பேன். நான் சினிமாவில் அறிமுகமாகும் போதே அவர் மிகப்பெரிய நடிகராக இருந்தவர். என்னை சரிக்கு சமமாக அமர வைத்து அழகு பார்த்திருக்கின்றார். அவர் நினைத்திருந்தால் நான் வளர்ந்து வரும் சமயத்திலேயே இந்த நடிகருக்கு பட வாய்ப்புகள் கொடுக்காதீர்கள். இவரை வைத்து யாரும் படம் எடுக்காதீர்கள் என்று கூறி இருக்க முடியும்.

ஆனால் அது எதையுமே அவர் செய்தது கிடையாது. கமலஹாசனின் படங்களை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு ஆச்சரியம் இருக்கும். எப்படி இந்த மனுஷனுக்கு மட்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது. திடீரென்று 80 வயது கிழவனாக நடிக்கின்றார், திடீரென 16 வயது கல்லூரி மாணவனாக நடிக்கின்றார் என்று யோசித்ததுண்டு. மேலும் எனக்கு தேசிய விருது பெறுவதில் ஆர்வமே வந்தது கிடையாது.

அதற்கு காரணமே கமலஹாசன் தான். கமலஹாசன் நடிப்பில் வெளியான சாகர சங்கமம் என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு தேசிய விருதுக்கு ஆசை படக்கூடிய தகுதி நமக்கு கிடையாது என்று எண்ணினேன். அந்த படத்தில் அவரின் நடிப்பை பார்த்து நான் மிரண்டு விட்டேன் என்று ஒரு மேடையில் பேசிய போது கூறியதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.

Published by
ராம் சுதன்